யார் இந்த ஈஷா சிங் ஐபிஎஸ்? - புதுச்சேரி காவல் அதிகாரியின் பின்புலம்

புதுச்சேரியில் நடந்த தவெக தலைவர் விஜய்யின் பொதுக் கூட்டத்துக்கு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட., ஆனால் வழக்கம்போல் அதிகப்படியான கூட்டம் திரள, புஸ்ஸி ஆனந்தும் நைஸாக அனுமதிக்க... அதை திறம்பட கட்டுப்படுத்தி, பொதுக் கூட்டத்துக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கினார் எஸ்எஸ்பி ஈஷா சிங்.

கூட்டம் அதிகரித்தபோது தவெகவினருடன் வாக்குவாதம் நடத்தி, அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் கவனத்தை ஈர்த்துள்ளன. ஐபிஎஸ் அதிகாரியான ஈஷா சிங் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் புதுச்சேரி காவல் துறைக்கு வந்தார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் முதலில் புதுச்சேரி கிழக்கு எஸ்பியாக பணியாற்றினார். அதையடுத்து எஸ்எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு அண்மையில் லஞ்ச ஒழிப்புத் துறை ஒதுக்கப்பட்டது. அங்கு தேங்கியிருந்த முக்கிய வழக்கை துரிதப்படுத்தினார்.

வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில் விளிம்பு நிலை மக்களுக்காக தனது கல்வியைப் பயன்படுத்தியுள்ளார். உதாரணத்துக்கு மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்தும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வாதாடி பெற்று தந்துள்ளார்.

தாத்தா, தந்தை வழியில் தானும் ஐபிஎஸ் ஆக விருப்பம் அவருக்கு உருவாகியது. பின்னர் யுபிஎஸ்சி தேர்வெழுதி ஐபிஎஸ் அதிகாரியானார். ஆனால், தற்போது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவில் அதற்காக முயற்சித்து வருகிறார். கூடவே, நீதிபதியாக வேண்டும் என்ற விருப்பமுள்ளதாகக் கூறும் அவர், அந்தத் தேர்வுகளிலும் ஆர்வத்தை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. - செ.ஞானபிரகாஷ்

யார் இந்த ஈஷா சிங் ஐபிஎஸ்? - புதுச்சேரி காவல் அதிகாரியின் பின்புலம்
ஆயுதமாக அண்ணாமலை... அமித் ஷாவின் ‘ப்ளான் பி’

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in