டெல்லி ஏஐ மாநாட்டில் சீன ‘ரோபோ’ - சர்ச்சையும் கிண்டலும்

டெல்​லி​யில் ஏஐ உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் ஒரு அரங்​கம் நொய்​டா​வில் உள்ள கல்​கோடி​யாஸ் என்ற தனி​யார் பல்கலைக்கழகத்​துக்கு ஒதுக்​கப்​பட்​டிருந்​தது. அதில் இருந்த பல்​கலைக்​கழகத்​தின் பிர​தி​நிதி ஒரு​வர் ‘ஓரி​யான்’ என்ற ரோபோட்​டிக் நாயை காட்​சிக்கு வைத்​திருந்​தார். இது தங்​கள் பல்​கலைக்​கழகத்​தின் சீர்​மிகு மையத்​தில் உருவாக்கப்​பட்​டது என்று கூறி, அதன் சிறப்பு அம்சங்களை பார்வை​யாளர்​களுக்கு விளக்​கி​னார். ஆனால், உண்​மை​யில் இது சீனா​வின் யுனிட்ரீ என்ற நிறு​வனத்​தின் ஜீஓ2 என்ற ரோபோட்​டிக் நாய். இது ஆன்​லைனில் 2 லட்​சம் ரூபாய் முதல் 3 லட்​சம் ரூபாய் வரை விற்கப்​படு​கிறது.

இதற்கு ‘ஓரி​யான்’ என பெயர் வைத்து கல்​கோடி​யாஸ் பல்கலைக்கழகம் தங்​களின் சொந்த தயாரிப்பு என ஏஐ கண்காட்சி​யில் விளம்பரப்​படுத்​தி​யுள்​ளது. இதை சீன ஊடகங்​கள் விமர்​சித்​துள்​ளன. இது தொடர்பான வீடியோ வைரலானது. இதையடுத்து டெல்லி கண்காட்சி அரங்கை காலி செய்யும்படி கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடப்பட்டது. இது குறித்து எக்ஸ் தளத்​தில் மக்களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, “ஏஐ உச்சி மாநாடு திட்​ட​மிடப்​ப​டாத விளம்பர கேலிக்கூத்​து. இங்கு இந்​திய தரவு​கள் விற்​கப்​படு​கின்​றன. சீன தயாரிப்​பு​கள் காட்​சிக்கு வைக்​கப்​பட்​டுள்​ளன. உலக அரங்​கில் இந்தியாவை கேலிக் கூத்​தாக்​கி​விட்​டது மோடி அரசு” என விமர்சித்துள்ளார்.

டெல்லி ஏஐ மாநாட்டில் சீன ‘ரோபோ’ - சர்ச்சையும் கிண்டலும்
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது ஏன்? - ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா விவரிப்பு

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in