

கோப்புப்படம்
சென்னை: ரமலான் நோன்பு பிப்.19-ம் தேதி (இன்று) முதல் தொடங்குவதாக அரசு தலைமை காஜி உஸ்மான் மொய்தீன் அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் முக்கியமான ஒன்றாகும். ரமலான் மாதத்தின் முந்தைய மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ரமலான் நோன்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், பிப்.19-ம் தேதி (இன்று) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி என்.பி.உஸ்மான் மொய்தீன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பிப்.18-ம் தேதி மாலை தமிழகத்தின் பல பகுதிகளில் புனித ரமலான் மாதத்துக்கான முதல் பிறை தென்பட்டது. இதைத் தொடர்ந்து பிப்.19-ம் தேதி முதல் புனித ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இஸ்லாமிய மக்கள் இன்று முதல் நோன்பு நோற்பார்கள். 30 நாட்கள் நோன்பை முடித்து, நிறைவு நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.