நீட் ரத்து கோரி திமுகவினர் உண்ணாவிரதம் - சென்னையில் உதயநிதி பங்கேற்பு | போட்டோ ஸ்டோரி

Published on
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறும் போராட்டத்தை திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும்உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவர்களின் படங்களுக்கு அமைச்சர் துரைமுருகன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவர்களின் படங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்த உண்ணாவிரதப் போராரட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், எம்.சண்முகம்,கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், ஆர்.கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஞாயிறு (ஆக.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைநடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in