திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறுகிறது
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து சேலத்துக்கு தனி விமானத்தில் நேற்று வந்தார்.
நேற்று மாநாட்டுத் திடலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான திமுகவினர் முன்னிலையில், மாநாட்டுக்கான சுடரை முதல்வர் ஸ்டாலின் ஏற்றிவைத்தார்.
இந்த நிலையில், திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுக கொடியை இன்று ஏற்றி வைத்தார்.
முன்னதாக மாநாட்டுப் பந்தலை திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் எழிலரசன் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் ஏராளமான திமுக தொண்டர்கள் இந்த மாநாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.
மாநாட்டுத் திடலில் வைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.