கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய பணிகள் தீவிரம் - புகைப்படத் தொகுப்பு

Published on
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. | படங்கள்: பி.வேளாங்கண்ணி ராஜ்

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பேருந்து நிலையமும் உருவாகிறது.

இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள், உணவகம் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டி உள்ளது. இந்த வசதிகளை முழுமையாக முடித்த பிறகு பேருந்து நிலையத்தை திறந்தால் தான் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்கின்றனர்.

இந்தப் பேருந்து நிலையத்தின் தரைத் தளத்தில் கடைகள், உணவகம், டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது.

முதல் தளத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்குவதற்கும், பொதுமக்கள் தங்குவதற்கும் டார்மெட்ரி வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in