

புதுடெல்லி: சுவிட்சர்லாந்தின் எழில்மிகு டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (டபிள்யூஇஎப்) 56-வது ஆண்டு கூட்டம் இன்று தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், இந்தியாவிலிருந்து மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், சிவராஜ் சிங் சவுகான், பிரகலாத் ஜோஷி, கே.ராம்மோகன் நாயுடு ஆகிய 4 அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும், மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ம.பி.முதல்வர் மோகன் யாதவ், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் என 6 மாநில முதல்வர்களும் பங்கேற்கின்றனர்.