அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான காசிரங்கா வழித்தட திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல்

2 அம்ரித் பாரத் ரயில் சேவையையும் தொடங்கினார்
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான காசிரங்கா வழித்தட திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல்
Updated on
1 min read

குவாஹாட்டி: அ​சாமில் ரூ.6,957 கோடி மதிப்​பிலான காசிரங்கா உயர்​மட்ட வழித்தட திட்​டத்​துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். மேலும் 2 அம்​ரித் பாரத் ரயில் சேவையை​யும் அவர் தொடங்கி வைத்​தார்.

பிரதமர் மோடி 2 நாள் பயண​மாக நேற்று முன்​தினம் மாலை அசாம் மாநிலம் குவாஹாட்டி சென்​றார். கின்​னஸ் சாதனைக்​காக போடோ பழங்​குடி​யின கலைஞர்​கள் 10,000 பேர் பங்​கேற்ற பகுரும்பா நடன நிகழ்ச்​சியை பார்​வை​யிட்​டார்.

குவாஹாட்​டி​யில் உள்ள அரசு விருந்​தினர் மாளி​கை​யில் இரவு தங்கிய பிரதமர் மோடி, நேற்று காலை​யில் நகோன் மாவட்​டம், கலி​யா​போர் சென்​றார். அங்கு ரூ.6,957 கோடி மதிப்​பில் அமையவுள்ள காசிரங்கா உயர்​மட்ட வழித்தட திட்​டத்​துக்கு பூமிபூஜை போட்டு அடிக்​கல் நாட்​டி​னார்.

இதுகுறித்து உயர் அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “காசிரங்கா தேசிய பூங்கா மற்​றும் புலிகள் காப்​பகத்​தில் வனவிலங்​கு​களின் பாது​காப்​பான நடமாட்​டத்தை உறுதி செய்​ய​வும், தேசிய நெடுஞ்சாலை - 715ல் ஏற்​படும் சாலை விபத்​துகளைக் குறைக்கவும், சூழலியல் சுற்​றுலாவை மேம்​படுத்​த​வும் இந்த வழித்தடம் உதவும். அதே வேளை​யில், இது உள்​ளூர் வேலை​வாய்ப்புகளையும் உரு​வாக்​கும்” என்​றார்.

மேலும் திப்​ரூகர் - கோமதி நகர் (லக்​னோ) மற்​றும் காமக்யா - ரோத்​தக் ஆகிய 2 வழித்​தடங்​களில் அம்​ரித் பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில்​கள் சேவையை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

பின்னர் நடை​பெற்ற பொதுக்​ கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: அசாமில் பல தசாப்​ தங்​களாக நீடித்த காங்​கிரஸ் ஆட்​சி​யில் ஊடுரு​வல் அதி​கரித்து வந்​தது. சட்​ட​ விரோத​மாக குடியேறியவர்​கள் காடு​கள், வனவிலங்கு வழித்​ தடங்​கள். பாரம்பரிய நிறுவனங்​களை ஆக்​கிரமித்​துள்​ளனர். நிலத்தை ஆக்கிரமித்த ஊடுரு​வல்​காரர்​களை வெளி​யேற்​று​வதன் மூலம், பாஜக அரசு அசாமின் அடை​யாளம், கலாச்​சா​ரத்​தை​ பாது​காத்து வரு​கிறது, நல்​லாட்சி மற்​றும் வளர்ச்​சிக்​காக வாக்​காளர்​கள் பாஜகவை நம்​பு​கிறார்​கள்.

பிஹாரில் 20 ஆண்​டு​களாக தொடர்ந்து ஆட்​சி​யில் இருந்த போதும் பாஜக கூட்​ட​ணிக்கு மக்​கள் அமோக வெற்​றியைக் கொடுத்​துள்​ளனர். மகா​ராஷ்டிரா உள்​ளாட்​சித் தேர்​தலிலும் மக்கள் பாஜக​வுக்கு வாக்​களித்​துள்​ளனர், கேரளா​விலும் கூட இப்போது பாஜகவைச் சேர்ந்த ஒரு​வர் மேய​ராகி உள்​ளார்.

சூழலியலும் பொருளா​தா​ர​மும் இணைந்து முன்​னேற முடி​யும் என்பதை இந்​தியா உலகுக்​குக் காட்​டி​யுள்​ளது. அசாமின் வளர்ச்சி ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்​களுக்​கும் வாய்ப்​பு​களை உருவாக்கித் தரும். ‘கிழக்கு நோக்​கிச் செயல்​படும் கொள்​கை’ இப்பகுதியை புதிய உயரத்​துக்கு கொண்டு செல்​லும். அசாமில் தொடங்கப்​பட்​ட திட்​டங்​கள்​ பாஜக​வின்​ வளர்ச்​சி மந்​திரத்​தை வலுப்படுத்தி​யுள்​ளன. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான காசிரங்கா வழித்தட திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல்
நூல் வடிவம் பெற்ற ‘நாவல்வாசிகள்’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in