நேபாள பெருவெள்ளத்தில் மரணத்தை நேரில் பார்த்தோம்: உயிர் தப்பிய இந்திய தம்பதி அதிர்ச்சி தகவல்

இந்திய தம்பதி பட்டாபிராமன் வெங்கடேசன், அஞ்சனா ராஜா

இந்திய தம்பதி பட்டாபிராமன் வெங்கடேசன், அஞ்சனா ராஜா

Updated on
1 min read

காத்மாண்டு: மரணத்தை கண் எதிரே நேரில் பார்த்தோம் என்று நேபாள பெருவெள்ளத்தில் உயிர் தப்பிய இந்திய தம்பதி தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட பட்டாபிராமன் வெங்கடேசன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான் பிரான்சிஸ்கோ பே பகுதியில் வசித்து வருகிறார். அவரும் அவரது மனைவி அஞ்சனா ராஜாவும் ஆன்மிக பயணமாக சீனாவின் திபெத்துக்கு சென்றனர்.

கடந்த 26-ம் தேதி இருவரும் நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பெருவெள்ளம் சீறிப் பாய்ந்து வந்தது. இதை பார்த்த பேருந்தின் ஓட்டுநர் கீழே குதித்து தப்பியோடி விட்டார். பட்டாபிராமன் வெங்கடேசனும் அவரது மனைவி அஞ்சனா ராஜாவும் பேருந்தில் இருந்து கீழே இறங்கி மலையில் ஏறி உயிர் தப்பினர்.

இதுகுறித்து அஞ்சனா கூறியதாவது: நாங்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பெருவெள்ளம் வந்தது. சுமார் 70 அடி உயரத்துக்கு சகதியுடன் கூடிய தண்ணீர் ஆர்ப்பரித்து சீறியதை பார்த்தேன். அப்போது மரணத்தை கண் எதிரே நேரில் பார்த்தோம். நாங்கள் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்ற அச்ச உணர்வு ஏற்பட்டது.

ஓட்டுநர், நடத்துநர், 2 உதவியாளர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டனர். வேறு வழியின்றி நாங்கள் இருவரும் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி மலையின் மீது ஏறி உயிர் தப்பினோம். அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் பேரதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அஞ்சனா தெரிவித்தார்.

பட்டாபிராமன் வெங்கடேசன் கூறும்போது, “அரக்கனை போன்று பெருவெள்ளம் சீறிப் பாய்ந்து வந்தது. நானும் எனது மனைவியும் அதிவேகமாக மலையில் ஏறி தப்பினோம். கரடு முரடான மலை மீது எப்படி வேகமாக ஏறினோம் என்பது எங்களுக்கே தெரியவில்லை. எங்கள் கண் எதிரில் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை எங்களால் காப்பாற்ற முடியவில்லை” என்றார்.

<div class="paragraphs"><p>இந்திய தம்பதி பட்டாபிராமன் வெங்கடேசன்,&nbsp;அஞ்சனா ராஜா</p></div>
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in