“பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்போம்” - இஸ்ரேல் அமைச்சர்

கிடியான் ஸார்

கிடியான் ஸார்

Updated on
1 min read

ஜெருசலேம்: "அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்க இந்தியாவுடன் துணை நிற்போம்” என பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியான் ஸார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இஸ்ரேல் நாட்டின் சார்பாக, உயிரிழந்த அப்பாவி மக்களின் நினைவைப் போற்றுவதோடு, அவர்களது குடும்பத்தினரின் துயரத்திலும் நாங்கள் துணை நிற்கிறோம்.

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தில் இஸ்ரேல் உறுதியுடனும் தளராத மனத்துடனும் தொடர்ந்து நிற்கும். இந்தியாவுடன் இணைந்து, இந்த அச்சுறுத்தலை உறுதியுடன் எதிர்கொள்ளவும், அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் எங்கள் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம்" என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார், ஒரு காணொளிச் செய்தியில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

<div class="paragraphs"><p>கிடியான் ஸார்</p></div>
ஹார்முஸ் ஜலசந்தியில் 2 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் - அமைதிப் பேச்சு தொடங்குவதில் சிக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in