ஈரானுடன் அமெரிக்கா 2-ம் கட்ட பேச்சு: ஜே.டி.வான்ஸ் பாகிஸ்தான் பயணிப்பதாக தகவல்

ஈரானுடன் அமெரிக்கா 2-ம் கட்ட பேச்சு: ஜே.டி.வான்ஸ் பாகிஸ்தான் பயணிப்பதாக தகவல்
Updated on
1 min read

வாஷிங்டன்: ஈரான் உடன் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 14 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இந்த இடைக்கால போர் நிறுத்தம் நாளை (ஏப்.22) நிறைவடைய உள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஜே.டி.வான்ஸ், பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஈரான் உடனான பேச்சுவார்த்தை விரைவில் பாகிஸ்தானில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நேற்று (ஏப்.20) தெரிவித்திருந்தார். அதற்காக போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வரும் நகர்வுகளை தங்கள் தரப்பு முன்னெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடு ஏற்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் நிலைப்பாடு என்ன?

ஹார்​முஸ் வளை​குடா பகு​தி​யில் சென்று கொண்​டிருந்த ஈரான் சரக்கு கப்​பலை அமெரிக்க கடற்​படை கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக, ஈரான் வெளியுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் இஸ்​மா​யில் பாகா​யி கூறும்போது, “போர் நிறுத்​தம் அமலானது முதல் அமெரிக்கா​வின் செயல்​பாடு​கள் முன்​னுக்​குப் பின் முரணாக உள்​ளன.

கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு ஈரான் சரக்கு கப்​பல் மீது அமெரிக்க கடற்​படை தாக்​குதல் நடத்தி உள்​ளது. இது போர் நிறுத்​தத்தை மீறும் செயல் ஆகும். அமெரிக்காவுடன் அடுத்த சுற்று அமை​திப் பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்​கும் திட்​டம் இல்​லை” என்றார்.

ஈரான் ராணுவ வட்​டாரங்​கள் கூறும்​போது, “சரக்கு கப்​பல் மீது அமெரிக்கா நடத்​திய தாக்​குதல் கடற்​கொள்ளை தாக்குதல் போன்​றது. ஈரான் கப்​பல் கடத்தப்பட்​டுள்​ளது. இதற்கு தக்க பதிலடி கொடுப்​போம். ஈரான் கப்​பலில் எங்களது மாலுமிகள், ஊழியர்​கள் உள்​ளனர். அவர்​களின் நலன் கருதி அமெரிக்​கா மீதான தாக்​குதலை தாமதப்படுத்​தி வரு​கிறோம்​” என்​று தெரிவித்​தன.

ஈரானுடன் அமெரிக்கா 2-ம் கட்ட பேச்சு: ஜே.டி.வான்ஸ் பாகிஸ்தான் பயணிப்பதாக தகவல்
“திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல” - முதல்வர் ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in