இந்திய பெருங்கடலில் ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்

இந்திய பெருங்கடலில் ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்
Updated on
1 min read

கொழும்பு: இந்திய பெருங்கடலில் இலங்கையின் கடற்பரப்பில் ஈரான் போர் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியதில் நீரில் மூழ்கியது. இதில் 83 பேர் உயிரிழந்ததாக தகவல். மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் தற்போது இந்திய துணைக்கண்டத்துக்கு அருகே அரங்கேறி உள்ளது.

இந்த தாக்குதலை அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஹெக்ஸத் உறுதி செய்துள்ளார். புதன்கிழமை அன்று சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழகி கப்பல் ஏவிய ‘டார்பிடோ’ குண்டு தாக்கியதில் ஈரான் போர் கப்பல் மூழ்கியது. பேரில் வெற்றிக்காக மேற்கொண்ட தாக்குதல் இது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு எதிரியின் விமானத்தை மூழ்கடிக்க செய்ய இந்த குண்டு ஏவப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் அயத்துல்லா அலி கமேனியின் இறுதி சடங்கு தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் கமேனிக்கு அடுத்ததாக புதிய உச்ச தலைவர் ஈரான் அறிவித்தால் அவரும் கொல்லப்படுவார் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. தெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகங்களை இஸ்ரேல் தாக்கி வருகிறது.

ஈரான் போர் கப்பல்: ஐஆர்ஐஎன்எஸ் Dena என்ற ஈரானின் போர் கப்பலை அமெரிக்கா தாக்கியுள்ளது. இதில் சுமார் 180 பேர் பயணித்ததாக இலங்கை தெரிவித்துள்ளது. அவர்களில் 32 பேரை இலங்கை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார். கப்பலில் இருந்தவதவர்களில் 83 பேர் உயிரிழந்ததாக தகவல். பிப்ரவரி 18 முதல் 25 வரை வங்காள விரிகுடாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியில் இந்த கப்பல் பங்கேற்றதாக தகவல்.

இந்திய பெருங்கடலில் ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்
ஃபின் ஆலன் அதிரடி சதம்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது நியூஸி! - T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in