புரதத்துக்கு ‘யெஸ்’, சர்க்கரைக்கு ‘நோ’ - அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் அரசின் புதிய ‘டயட் சார்ட்’

புரதத்துக்கு ‘யெஸ்’,  சர்க்கரைக்கு ‘நோ’ -  அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் அரசின் புதிய ‘டயட் சார்ட்’
Updated on
1 min read

அமெரிக்க சுகாதாரத் துறைச் செயலர் ராபர்ட் கென்னடி ஜூனியர், அமெரிக்கர்களுக்கான புதிய ஊட்டச்சத்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்கர்கள் தங்கள் உணவில் அதிக புரதச்சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வேளாண் துறை மற்றும் சுகாதாரம், மக்கள் சேவைகள் துறை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க மக்களுக்கு இத்தகைய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடுவது வழக்கம்.

அதன்படி, அமெரிக்கர்கள் இனி புரதச்சத்து நிறைந்த உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முழு கொழுப்பு கொண்ட பால் சார்ந்த உணவுப் பொருட்களை ஒருநாளின் மூன்று வேளை உணவிலும் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மது பானங்கள் அருந்துவதைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள், ஃபெடரல் அரசின் பள்ளிகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்களுக்கும் அடிப்படையாக அமையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கென்னடி, “எனது அறிவிப்பு மிகவும் தெளிவானது. உணவை உண்ணுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை அல்ல” என்றார்.

புரதச் சத்து நிறைந்த, முழு கொழுப்பு நிரம்பிய பால் பொருட்கள், நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியனவற்றை உண்ண வேண்டும். சிப்ஸ் வகைகள், குக்கீஸ், கேண்டி வகை உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்பதே வழிகாட்டுதலாக உள்ளது.

அமெரிக்கர்கள் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அவர்கள் சேச்சுரேடட் ஃபேட் எனப்படும் நிறைவுபெற்ற கொழுப்பை அதிகம் உண்வதை கட்டுப்படுத்த இந்த புதிய வழிகாட்டுதல் உதவியாக இருக்கும் என்று அரசுத் தரப்பு நம்புகிறது.

அதன்படி, சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம் அல்லது மாட்டிறைச்சி கொழுப்பைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறது.

அதேபோல் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி, அமெரிக்கர்கள் உடல்நலத்தைப் பேண மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்பு ஆண்கள், பெண்கள் ஒருநாளில் இவ்வளவு மது அருந்திக் கொள்ளலாம் என்ற கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், தற்போது அப்படியான பரிந்துரைகள் இல்லாமல் மது அருந்துவதை குறைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணிகள், நோயாளிகள் மது அருந்துவதை முழுக்க முழுக்க கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பரிந்துரைகளுக்கு ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் ஊட்டச்சத்து நிபுணர்கள் பலரின் எதிர்வினையும் எழுந்துள்ளது.

புரதத்துக்கு ‘யெஸ்’,  சர்க்கரைக்கு ‘நோ’ -  அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் அரசின் புதிய ‘டயட் சார்ட்’
அச்சத்துக்கு அப்பால்... அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in