மாநில அளவிலான வாலிபால் போட்டி: சிவந்தி கிளப் அணி வெற்றி

மாநில அளவிலான வாலிபால் போட்டி: சிவந்தி கிளப் அணி வெற்றி

Published on

சென்னை: நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரைபாண்டியன் நினைவு மாநில அளவிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் ஆடவர் பிரிவில் 8 அணிகளும், மகளிர் பிரிவில் 5 அணிகளும் பங்கேற்றுள்ளன.

தொடக்க நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நெல்லை பிரண்ட்ஸ் கிளப்பின் தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், வருமானவரித்துறை ஆணையர் எஸ்.ஏ.கருப்பசாமி, எஸ்டிஏடி பொதுமேலாளர் எல்.சுஜாதா, தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் பொதுச் செயலாளர் மார்ட்டின் சுதாகர் மற்றும் நெல்லை பிரண்ட்ஸ் கிளப்பின் நிர்வாகிகள் பி.ஜெகதீசன், ஏ.தினகர், சி.கேசவன், பரிமேலழகன், பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆடவர் பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சென்னை நியூ கல்லூரி 25-19, 25-19 என்ற நேர் செட் கணக்கில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியை தோற்கடித்தது. மகளிர் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப் 25-15, 25-11 என்ற செட் கணக்கில் தமிழக காவல்துறை அணியை வென்றது. எஸ்டிஏடி அணி 25-14, 25-18 என்ற கணக்கில் எஸ்ஆர்எம் ஸ்பைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது.

மாநில அளவிலான வாலிபால் போட்டி: சிவந்தி கிளப் அணி வெற்றி
சரணடைய வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கோரிக்கையை நிராகரித்த ஈரான் அதிபர் மசூத்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in