நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்கு தெரியும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து

நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்கு தெரியும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து
Updated on
1 min read

வாஷிங்டன்: ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் நான் மகிழ்ச்​சி​யாக இல்லை என்​பது பிரதமர் நரேந்​திர மோடிக்கு தெரி​யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா​வின் புளோரி​டா​வில் இருந்து தலைநகர் வாஷிங்​டன் செல்​லும்​போது, ‘ஏர் போர்ஸ் ஒன்' விமானத்​தில் நிருபர்​களுக்கு அதிபர் ட்ரம்ப் பேட்​டியளித்​தார். அப்​போது ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வது குறித்து அவரிடம் கேள்வி எழுப்​பப்​பட்​டது.

இதற்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பதில் வரு​மாறு: அடிப்​படை​யில் அவர்​கள் (இந்​தி​யா) என்னை மகிழ்ச்​சிப்படுத்த விரும்​பு​கிறார்​கள். இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி நல்ல மனிதர். ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் நான் மகிழ்ச்​சி​யாக இல்லை என்​பது மோடிக்கு தெரி​யும். என்னை மகிழ்ச்​சிப்படுத்​து​வது மிக​வும் முக்​கி​யம்.

அவர்​கள் (இந்​தி​யா), அமெரிக்கா​வுடன் வர்த்​தகம் செய்​கிறார்​கள். அவர்​கள் மீது மிக விரை​வாக வரி​களை உயர்த்த முடி​யும். இவ்​வாறு அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார்.

முன்​ன​தாக அமெரிக்க செனட்​டர் லிண்ட்சே கிரஹாம் கூறிய​தாவது: ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் இந்​தியா மீது கூடு​தலாக 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்​திருக்​கிறது.

ஒரு மாதத்​துக்கு முன்​பாக அமெரிக்கா​வுக்​கான இந்​திய தூதர் வினய் குவாத்​ராவை அவரது வீட்​டில் சந்​தித்​தேன். அப்​போது அமெரிக்​கா​வின் கூடு​தல் வரி​வி​திப்பை வாபஸ் பெறு​மாறு இந்​திய தூதர் கோரிக்கை விடுத்​தார்.

இதற்கு ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்த வேண்​டும் என்று நான் வலி​யுறுத்​தினேன். அமெரிக்​கா​வின் அறி​வுரை​யால் ரஷ்​யா​விடம் இருந்து வாங்​கும் கச்சா எண்​ணெய் அளவை இந்​தியா குறைத்​திருக்​கிறது.

அமெரிக்​கா​வில் புதி​தாக ஒரு சட்​டத்தை இயற்ற திட்​ட​மிட்டு உள்​ளோம். இதன்​படி ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கும் நாடு​கள் மீது 500% வரி விதிக்க வழி​வகை செய்​யப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்கு தெரியும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து
வங்கதேசத்தில் மேலும் ஓர் இந்து இளைஞர் கொலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in