நேட்டோ அமைப்பில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலனை

நேட்டோ அமைப்பில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலனை
Updated on
1 min read

வாஷிங்டன்: நேட்டோ ஒரு ‘காகிதப் புலி' என்​றும் அதிலிருந்து வெளி​யேறு​வது பற்றி தீவிர​மாக பரிசீலிப்பதாக​வும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்​ளார். மேற்கு ஆசி​யப் போர் காரண​மாக ஹார்முஸ் ஜலசந்​தியை ஈரான் மூடி​யுள்​ளது.

இதனால் உலகம் முழு​வதும் எரிபொருள் தட்​டுப்​பாடு ஏற்​பட்டு அதன் விலை உயர்ந்து வரு​கிறது. இந்​நிலை​யில், ஹார்​முஸ் ஜலசந்​தியை திறப்​ப​தற்​கான முயற்​சி​யில் உலக நாடு​கள் இணைய வேண்​டும் என்​றும் இதற்​காக தங்​கள் நாட்டு போர்க்​கப்​பல்​களை அனுப்ப வேண்​டும் என்​றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்​தார். ஆனால், பிரிட்​டன் உள்​ளிட்ட ஐரோப்​பிய நாடு​கள் கூட இதைப் பொருட்​படுத்​த​வில்​லை. இதனால் ட்ரம்ப் கோபமடைந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், பிரிட்​டனின் டெய்லி டெலிகி​ராப் இதழுக்கு ட்ரம்ப் அளித்த பேட்​டி​யில், ‘‘ஈரானுக்கு எதி​ரான அமெரிக்கா​வின் ராணுவ நடவடிக்​கைக்கு நட்பு நாடு​கள் ஆதரவு அளிக்​கத் தவறிய​தால், நேட்டோ அமைப்​பிலிருந்து வெளி​யேறு​வது குறித்து தீவிர​மாகப் பரிசீலித்து வருகிறேன்’’ என்றார்.

நேட்டோ கூட்​ட​ணியை ஒரு ‘காகிதப் புலி' என்று வர்​ணித்த ட்ரம்ப், நேட்​டோ​வின் நம்​பகத்​தன்மை குறித்து தனக்கு நீண்​ட​கால​மாகவே சந்​தேகம் இருந்​த​தாக​வும் கூறி​னார். பிரிட்​டனின் போர்க்​கப்​பல் படை​யின் நிலையை நேரடியாகச் சாடிய ட்ரம்ப், ‘‘உங்​களிடம் ஒரு கடற்​படை கூட இல்​லை. நீங்​கள் மிக​வும் பழமை வாய்ந்​தவர்​கள், உங்களிடம் இருந்த விமானம் தாங்கி கப்​பல்​களும் வேலை செய்​ய​வில்​லை’’ என்​றார்.

இது எங்கள் போர் அல்ல

ட்ரம்​பின் இந்​தக் கருத்து பற்றி பிரிட்டன் பிரதமர் ஸ்டார்​மர் கூறும்​போது, “பிரிட்​டன் நேட்டோ அமைப்​புக்கு முழு​மை​யாகக் கட்​டுப்​பட்​டிருக்​கிறது. நேட்டோ என்​பது உலகம் கண்ட மிகச்​சிறந்த மற்​றும் பயனுள்ள ராணுவக் கூட்​ட​ணி.

என் மீதும் மற்​றவர்​கள் மீதும் என்ன அழுத்​தம் இருந்​தா​லும், என்ன சலசலப்​பு​கள் எழுந்​தா​லும், பிரிட்​டனின் தேசிய நலனைக் கருத்​தில் கொண்டே செயல்​படு​வேன். இது எங்​களு​டைய போர் அல்ல. இதில் எங்​களை இழுக்க முடி​யாது’’ என்​றார். ஹார்​முஸ் நீரிணையை மீண்​டும் திறப்​ப​தற்​கான வழிகளை ஆராய்​வதற்​காக, பிரிட்​டன் சார்​பில் சர்​வ​தேச ராஜதந்​திர மாநாடு நடத்​தப்​படும் என்​றும் ஸ்டார்​மர் அறிவித்​தார்.

முக்​கிய​மான எண்​ணெய் போக்​கு​வரத்​துப் பாதை​யில் கடல்​சார் பாது​காப்பை மீட்​டெடுப்​ப​தற்​காக இணைந்து பணி​யாற்​று​வதற்​கான ஒரு அறிக்​கை​யில் 35 நாடு​கள் கையெழுத்​திட்​டுள்​ள​தாக அவர் கூறி​னார்.

மேலும், வெளி​யுறவுச் செய​லா​ளர் யவெட் கூப்​பர் இந்த மாநாட்​டுக்​குத் தலைமை தாங்​கு​வார் என்​றும், ஈரான் போருக்​குப் பிந்தைய காலத்​துக்​கான பாது​காப்பு திட்​டங்​களில் ராணுவத் திட்​ட​மிடு​பவர்​கள் பணி​யாற்றி வருகின்றனர் என்​றும் அவர் குறிப்​பிட்​டார். ராணுவ பலம் மற்​றும் ராஜதந்​திர செயல்​பாடு​கள் இணைந்த ஒரு ஒருங்கிணைந்​த முன்​னணி, நிலைத்​தன்​மை​யை மீட்டெடுக்​கத்​ தேவை என்​று ஸ்டார்​மர்​ கூறி​னார்​.

நேட்டோ அமைப்பில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலனை
கோவை வடக்கா, மொடக்குறிச்சியா? - அண்ணாமலையின் முடிவுக்காக காத்திருக்கும் பாஜக வேட்பாளர் பட்டியல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in