அமெரிக்காவின் எச்1பி விசா கட்டணத்தை ரூ.98 லட்சமாக அதிகரிக்க திட்டம்

அமெரிக்காவின் எச்1பி விசா கட்டணத்தை ரூ.98 லட்சமாக அதிகரிக்க திட்டம்
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்காவின் எச்1பி விசா கட்​ட​ணத்தை ரூ.98 லட்​ச​மாக அதி​கரிக்க திட்​ட​மிடப்​பட்டுள்​ளது. வெளி​நாடு​களை சேர்ந்த திறன்​வாய்ந்த தொழிலா​ளர்​களுக்​காக அமெரிக்க அரசு சார்​பில் எச்1பி விசா வழங்​கப்​படு​கிறது.

இந்த விசா​வின் காலம் 3 ஆண்​டு​கள் ஆகும். இதனை 6 ஆண்​டு​கள் வரை நீட்​டிக்க முடி​யும். ஓராண்​டுக்கு 85,000 எச்​1பி விசாக்​களை மட்​டுமே அமெரிக்கா வழங்​கு​கிறது. இதில் 71 சதவீதத்தை இந்​தி​யர்​கள் பெறுகின்​றனர். 12 சதவீத விசாக்​களை சீனர்​களும் இதர நாடு​களை சேர்ந்​தோர் 17 சதவீத விசாக்​களை​யும் பெறுகின்​றனர்.

கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி​யில் அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்ற பிறகு எச் 1 பி விசா நடை​முறை​கள் கடுமை​யாக்​கப்​பட்டு வரு​கின்​றன. கடந்த ஆண்டு எச்​1பி விசா கட்​ட​ணம் ரூ.1.9 லட்​சத்​தில் இருந்து ரூ.88 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டது. இதன்​மூலம் அமெரிக்க நிறு​வனங்​களில் வெளி​நாட்டு மென்​பொறி​யாளர்​கள் பணி​யில் சேரு​வதை தடுக்க மறை​முக​மாக நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

ஆனால் அமெரிக்​கா​வின் பல்​வேறு நீதி​மன்​றங்​கள் எச்​1பி விசா கட்டண உயர்​வுக்கு தடை விதித்​தன. இதை எதிர்த்து அமெரிக்க அரசு சார்​பில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்டு உள்​ளது. இந்த மேல்​முறை​யீட்டு வழக்கு இன்​ன​மும் நிலு​வை​யில் இருக்​கிறது. இதன்​காரண​மாக தற்​போது எச்​1பி விசாவுக்கு ரூ.1.9 லட்​சம் முதல் ரூ.4.7 லட்​சம் வரை மட்​டுமே கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த சூழலில் அமெரிக்​கா​வின் உள்​துறை பாது​காப்பு அமைச்​சகம் சார்​பில் அதிபர் டொனால்டு ட்ரம்​பிடம் புதிய பரிந்​துரை சமர்ப்​பிக்​கப்​பட்டு உள்​ளது. அதில், எச்1 பி விசா கட்​ட​ணத்தை ரூ.98 லட்​ச​மாக அதி​கரிக்க பரிந்​துரை செய்​யப்​பட்டு இருக்​கிறது. இந்த கட்டண உயர்வை நடப்​பாண்டு இறு​திக்​குள் அமல்​படுத்த அதிபர் ட்ரம்ப்​ நிர்​வாகம்​ திட்​ட​மிட்​டு உள்​ளது.

அமெரிக்காவின் எச்1பி விசா கட்டணத்தை ரூ.98 லட்சமாக அதிகரிக்க திட்டம்
ஏன் இந்த அவசரம்? - பரந்தூர் திட்டம் ரத்து விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு பாஜக சரமாரி கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in