

ஹவானா: வெனிசுலாவில் நடந்த அமெரிக்க ராணுவ நடவடிக்கையின்போது தங்களது நாட்டைச் சேர்ந்த 32 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக கியூபா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்” வெனிசுலா அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் கியூபாவின் ராணுவ மற்றும் காவல் துறை அதிகாரிகள் பல ஆண்டுகளாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் வெனிசுலாவை சுற்றிவளைத்து அமெரிக்கா நடத்திய திடீர் தாக்குதலில் 32 கியூபா அதிகாரிகள் உயிரிழந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் புளோரிடாவிலிருந்து வாஷிங்டனுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்த போது செய்தியாளர்களிடம் கூறுகையில், “நேற்று (சனிக்கிழமை) கியூபா மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்த நிறைய பேர் கொல்லப்பட்டனர் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், எங்கள் தரப்பில் எந்த உயிரிழப்பும் இல்லை” என்றார்.