அமெரிக்கா, ஈரான் 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்தது

அமெரிக்கா, ஈரான் 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்தது
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்​. 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வந்​தது. கடந்த ஜூன் 17-ம் தேதி இரு நாடு​கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்​தானது.

இந்த போர் நிறுத்​தம் அடுத்த 60 நாட்​கள் அமலில் இருக்​கும். அதற்குள் இறுதி அமைதி ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த வேண்​டும் என்று இருதரப்பு இடையே உடன்​பாடு எட்​டப்​பட்​டது. இந்த சூழலில் 60 நாட்​கள் போர் நிறுத்த ஒப்​பந்​தம் நேற்​றுடன் நிறைவடைந்​தது.

இதுதொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று கூறும்​போது, “ஈரான் தரப்பு வெள்ளை கொடியை காட்டி சரண் அடைய வேண்​டும் என்ற எனது முடி​வில் மாற்​றம் கிடை​யாது” என்று தெரி​வித்​தார்.

ஈரான் வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் இஸ்​மா​யில் பாகாயி கூறும்​போது, “போர் நிறுத்த ஒப்​பந்​தத்தை அமெரிக்கா அடிக்​கடி மீறியது. இதனால் ஒப்​பந்​தம் கையெழுத்​தான​தில் எந்த பயனும்​ இல்​லை” என்​று தெரிவித்​தார்​.

அமெரிக்கா, ஈரான் 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்தது
கிராம நத்தத்தில் வசிக்கும் 20 லட்சம் பேருக்குப் பட்டா: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in