கிராம நத்தத்தில் வசிக்கும் 20 லட்சம் பேருக்குப் பட்டா: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஆங்கிலேயர் ஆட்சி கால நிலவரி வசூல் ரத்து செய்யப்படும்
அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

Updated on
2 min read

சென்னை: ‘‘தமிழகத்​தில் கிராம நத்​தம் காலி மனை​களில் வசிக்கும், 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோருக்குப் பட்டா வழங்கப்படும். ஆங்​கிலேயர் ஆட்​சிக் கால நில​வரி வசூல் ரத்து செய்​யப்​படும். நெடுஞ்​சாலை அமைப்​ப​தற்​கான நிலம் எடுப்பு நடை​முறை எளி​தாக்​கப்​படும்’’ என்​று சட்​டப்​பேர​வை​யில் அமைச்சர் கே.ஏ.செங்​கோட்​டையன் அறி​வித்​துள்​ளார்.

சட்​டப்​பேர​வை​யில் வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்​மைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்​துக்கு நேற்று பதிலளித்த அமைச்​சர் செங்​கோட்​டையன் வெளி​யிட்ட புதிய அறிவிப்​பு​கள்:

வரு​வாய்த் துறை மூலம் வழங்​கப்​படும் அனைத்து சான்​றிதழ்​களும் விரை​வாக வழங்​கும் வகை​யில், விஏஓ, வரு​வாய் ஆய்​வாளர், துணை வட்​டாட்​சி​யர் அல்​லது வட்​டாட்​சி​யர் என்ற 3 அலுவலர் படிநிலை​யில் விண்​ணப்​பங்​களைப் பரிசீலிக்​கும் நடை​முறை அறி​முகப்​படுத்​தப்​படும்.

பொது​மக்​கள் தங்​கள் இருப்​பிடங்​களுக்கு அரு​கிலேயே தங்​களுக்​கான சேவை​களைப் பெறும் வகை​யில், முதல் கட்​ட​மாக சென்​னை​யில் ரூ.1.02 கோடி​யில் துணை வட்​டாட்​சி​யர் தலை​மை​யில், 12 சிறு வட்ட அலு​வல​கங்​கள் அமைக்​கப்​படும். விவ​சா​யிகள், நில உரிமை​யாளர்​கள் பயன்​பெறும் வகை​யில், ஆங்​கிலேயர் ஆட்சியில் கொண்டு வரப்​பட்ட நில​வரி வசூல் 1436-ம் பசலி ஆண்டு (ஜூலை 1-ம் தேதி) முதல் ரத்து செய்​யப்​படும்.

தமிழகத்​தில் உள்ள 12,466 கிராம நிர்​வாக அலு​வலர்​கள், 1,263 குறு​வட்ட வரு​வாய் ஆய்​வாளர்​களுக்கு ரூ.68.63 கோடி​யில் கையடக்க கணினிகள் வழங்​கப்​படும். கிராமநத்​தம் காலி மனை​களில் வீடு கட்டி வசிக்​கும் தகுதி வாய்ந்த 20 லட்​சத்​துக்​கும் மேலான ஏழை குடும்​பங்​களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க சிறப்​புத் திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

கணினிமய​மாக்​கலின் போது, ஊரக மற்​றும் கிராமநத்​தம் நிலப் பதிவேடு​களில் ஏற்​பட்ட பிழைகளைத் திருத்த, சிறப்பு முன்​னெடுப்பு மேற்​கொள்​ளப்​படும். நில அளவை சேவை​களை விரை​வாக வழங்க, களப்​பணி​யாளர்​களுக்கு ரூ.136.68 கோடி மதிப்​பில் பூகோள நிலைக்​களன் (டிஜிபிஎஸ் ரோவர்​ஸ்) வழங்​கப்​படும். தகுதி வாய்ந்த 1,500 பேருக்கு நில அளவைக்​கான பயிற்சி அளிக்​கப்​பட்டு உரிமம் வழங்​கி, நில அளவைப் பணி​களில் ஈடு​படுத்​தப்​படு​வர்.

வரு​வாய்த் துறை​யினர் தாக்​குதலுக்கு உள்​ளாவதைத் தடுக்க சிறப்பு பணிப் பாது​காப்​புச் சட்​டம் இயற்​றப்​படும். விஏஓ அலு​வலக பராமரிப்​புக்​காக ஒரு விஏஓவுக்கு மாதம் ரூ.12,000 வழங்​கப்​படும். தமிழ்​நாடு நிலச்​சீர்​திருத்த சட்ட நெறி​முறை​களை எளிமைப்​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​படும்.

பேரிடர் காலங்​களில் உட்​கட்​டமைப்​பு​களின் பாது​காப்பை வலுப்​படுத்த ஒருங்​கிணைந்த பல்​பேரிடர் முன்​னெச்​சரிக்கை மற்​றும் நிகழ்​நேர தரவு சேகரிப்பு அமைப்பு ரூ.80 கோடி​யில் செயல்​படுத்​தப்​படும். நெடுஞ்​சாலைகள் அமைப்​ப​தற்​குத் தேவை​யான நில எடுப்பு நடை​முறை​கள் எளி​தாக்​கப்​படும். இது​போன்ற 21 அறி​விப்​பு​களை அமைச்​சர் செங்​கோட்​டையன் வெளி​யிட்​டார்.

சங்க நிர்​வாகி​கள் நன்றி

வரு​வாய் நிர்​வாக அலு​வலர்​கள் தொடர்​பாக அறி​விப்பு வெளி​யிட்​டதற்​காக, அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையனை கிராம நிர்​வாக அலு​வலர் சங்​கத் தலை​வர் இரா.அருள்​ராஜ் உள்​ளிட்ட நிர்​வாகி​கள், தமிழ்​நாடு கிராம நிர்​வாக அலு​வலர்​கள் சங்க மாநில பொதுச் செய​லா​ளர் சி.கு​மார், கூடு​தல் பொதுச் செய​லா​ளர் என்​.சுரேஷ் உள்​ளிட்ட நிர்​வாகி​கள்​ சந்​தித்​து நன்​றி தெரிவித்​தனர்​.

<div class="paragraphs"><p>அமைச்சர் செங்கோட்டையன்</p></div>
ரூ.1 லட்சம் வரை கடன் பெற்ற 2.38 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.75,000 பயிர்க் கடன் தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in