

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் உளவுத் துறை தலைவராக இருந்தவர் துளசி கப்பார்ட். இவர் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இவர் தனது பதவியின் கடைசி நாளில் வெளியிட்ட ஆவணத்தில் கூறியிருப்பதாவது: நான் தற்போது வெளியிடுவது இதுவரை யாரும் பார்க்காத ஆவணம். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் முன்னாள் தலைமை மருத்துவ ஆலோசகரான அந்தோணி பவுசி, சீனாவில் உள்ள வுஹான் வைராலஜி நிறுவனத்தில் நடைபெற்ற வவ்வால்களில் கரோனா வைரஸ்கள் குறித்த ஆபத்தான ஆராய்ச்சிக்கு நிதியளித்தார். இந்த நிறுவனத்தில் இருந்துதான் கரோனா தொற்று பரவியதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவை கரோனா தாக்கியபோது, அப்போதைய அதிபர் பைடன் அரசின் கரோனா தடுப்பு அணுகுமுறைக்கு தலைமை தாங்கிய பவுசி, சீன ஆய்வு நிறுவனத்துக்கு நிதியளிக்க அமெரிக்கர்களின் கோடிக்கணக்கான வரிப் பணத்தை வழங்கினார். சீன ஆய்வகத்திலிருந்து கரோனா வைரஸ் பரவிய உண்மைகளை பவுசி மறைத்து நாடாளுமன்றத்துக்கு பொய் தகவல்களை கூறியுள்ளார். நம்பகமான ஆதாரங்கள் புதைக்கப்பட்டன. இவ்வாறு துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.