கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்

கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்
Updated on
2 min read

டெஹ்ரான்: ஈ​ரானின் கச்சா எண்​ணெய் ஏற்​றுமதி தளமான கார்க் தீவு மீது அமெரிக்க ராணுவம் நேற்று மிகப்​பெரிய தாக்​குதலை நடத்​தி​யது. அப்​போது ஈரானின் 3 எண்​ணெய் கப்​பல்கள் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

ஈரான் கடற்​கரை​யில் இருந்து 26 கி.மீ. தொலை​வில் கார்க் தீவு அமைந்​துள்​ளது. ஈரான் முழு​வதும் இருந்து குழாய்​கள் மூலம் இந்த தீவுக்கு கச்சா எண்​ணெய் கொண்டு வரப்​படு​கிறது. அங்​கிருந்து உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், எல்​பிஜி, எல்​என்ஜி ஏற்​றுமதி செய்​யப்​படு​கிறது. ஈரான் பொருளா​தா​ரத்​தின் முது​கெலும்​பாக கார்க் தீவு விளங்​கு​கிறது.

கடந்த ஒரு வார​மாக அமெரிக்​கா, ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரு​கிறது. இந்த சூழலில் ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்க ராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி மிகப்​பெரிய தாக்​குதலை நடத்​தி​யது. அப்​போது தீவுக்கு அருகே சென்று கொண்​டிருந்த ஈரானின் 3 கச்சா எண்​ணெய் கப்​பல்கள் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

அமெரிக்க தாக்​குதலுக்கு பதிலடி​யாக ஜோர்​டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி தாக்​குதல் நடத்​தி​யது. ஐக்​கிய அரபு அமீரகம், குவைத் உள்​ளிட்ட வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீதும் ஈரான் ராணுவம் தாக்​குதல் நடத்​தி​ய​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இதுகுறித்து ஈரான் ராணுவ வட்​டாரங்​கள் கூறும்​போது, “அமெரிக்க தாக்​குதலில் எங்களது எண்​ணெய் கப்​பல்கள் கடுமை​யாக சேதமடைந்து உள்​ளன. எனினும் கப்​பல் மாலுமிகள், ஊழியர்​களுக்கு எவ்​வித பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை. அவர்​கள் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு உள்​ளனர். அமெரிக்க ராணுவ தாக்​குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்​கப்​படும்” என்று தெரி​வித்​தன.

அமெரிக்க ராணுவ வட்​டாரங்​கள் கூறும்​போது, “கடந்த ஒரு வார​மாக ஈரானின் ராணுவ தளங்​கள், ரேடார்​கள், கடல் கண்​ணிவெடிகளை வீசும் படகு​கள், தொலைத்​தொடர்பு கட்​டமைப்​பு​களை குறி​வைத்து தாக்​குதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது. சனிக்கிழமை மட்டும் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை தகர்த்துள்ளோம்” என்று தெரி​வித்​தன.

அமெரிக்​கா, ஈரான் போர் குறித்து பொருளா​தார நிபுணர்​கள் கூறும்​போது, “உல​கின் 20 சதவீத கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக நடை​பெறுகிறது. அமெரிக்​கா, ஈரான் போர் மீண்​டும் தீவிரமடைந்து வரு​வ​தால் இந்த ஜலசந்​தி​யில் கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது. இதேநிலை நீடித்​தால் கச்சா எண்​ணெய் விலை கணிசமாக உயரக்​கூடும்” என்று தெரி​வித்​தனர்.

அணு சக்தி தளம் அழிக்​கப்​படும்: ட்ரம்ப்

ஈரானின் இஸ்​பஹான் மாகாணத்​தில் பிக்​காக்ஸ்மலை அமைந்​துள்​ளது. இந்த மலைப்​பகு​தி​யில் பூமிக்கு அடி​யில் சுமார் 330 அடி ஆழத்​தில் நடான்ஸ் அணுசக்தி தளம் உள்​ளது. கடந்த ஆண்டு மற்​றும் இந்த ஆண்​டின் மார்ச் மாதத்தில் நடான்ஸ் அணுசக்தி தளம் மீது அமெரிக்க விமானப் படை​யின் அதிநவீன பி-2 போர் விமானங்​கள் குண்​டு​களை வீசின.

இந்த சூழலில் அதற்கு அருகே சுமார் 2 கி.மீ. தொலை​வில் புதி​தாக ஓர் அணு சக்தி தளம் செயல்பட தொடங்​கி​யிருப்​ப​தாக​ தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இதுதொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறும்​போது, “ஈரானின் பிக்​காக்ஸ் மலைப் பகு​தி​யில் விரை​வில் மிகப்​பெரிய தாக்​குதல் நடத்​தப்​படும். அங்கு சந்​தேகத்​துக்​குரிய அணு சக்தி தளம் அழிக்​கப்​படும்" என்று தெரி​வித்​தார்.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்
ஷமியிடம் இன்னும் வேட்கை இருக்கிறது: சொல்கிறார் இஷான் கிஷன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in