ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது அமெரிக்கா: கச்சா எண்ணெய் விலை 8% உயர்ந்தது

ஈரான் கப்பல்கள் நுழைந்தால் தகர்க்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளால் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் சுமார் 3,200 சரக்கு, எண்ணெய் கப்பல்கள் பரிதவித்து வருகின்றன. இந்த கப்பல்களில் 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள், ஊழியர்கள் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஸ் அல்-கைமா துறைமுகம் அருகே ஒரு சரக்கு கப்பல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கிறது. படம்: ஏஎப்பி

ஈரான் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளால் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் சுமார் 3,200 சரக்கு, எண்ணெய் கப்பல்கள் பரிதவித்து வருகின்றன. இந்த கப்பல்களில் 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள், ஊழியர்கள் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஸ் அல்-கைமா துறைமுகம் அருகே ஒரு சரக்கு கப்பல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கிறது. படம்: ஏஎப்பி

Updated on
2 min read

வாஷிங்டன்: ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடி​விட்​டோம் என்று அமெரிக்க ராணுவம் அறி​வித்து உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்​துள்​ளது.

கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்​கா - ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி இருதரப்​பிலும் 2 வாரங்​களுக்கு போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக கடந்த 11-ம் தேதி பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. சுமார் 21 மணி நேரம் நீடித்த இந்த பேச்​சு​வார்த்தை தோல்​வி​யில் முடிந்​தது. இதையடுத்து, “ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடும் நடவடிக்கை விரை​வில் தொடங்​கப்​படும்’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார்.

இதுகுறித்து அமெரிக்க ராணுவம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அதிபர் ட்ரம்​ப்பின் உத்​தரவை ஏற்று அமெரிக்க நேரத்​தின் ​படி ஏப்.13-ம் தேதி காலை 10 மணிக்கு (இந்​திய நேரப்​படி ஏப்.13 இரவு 7.30) ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​படும். இதன்​பிறகு ஈரான் துறை​முகங்​களில் இருந்து வரும் அனைத்து கப்​பல்களும் தடுத்து நிறுத்​தப்​படும். மற்ற நாடு​களின் துறை​முகங்​களில் இருந்து வரும் கப்​பல்​களை தடுக்க மாட்​டோம். அவை வழக்​கம்​போல கடந்து செல்​லலாம்.

இவ்​வாறு அமெரிக்க ராணுவம் தெரி​வித்​துள்​ளது. இந்​திய நேரப்​படி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் இரு​புறங்​களை​யும் அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் சுற்றி வளைத்​தன. அமெரிக்​காவின் கண்​காணிப்பை மீறி ஈரானில் இருந்து வரும் எந்த கப்பலும் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க முடி​யாது என்று ராணுவம் எச்​சரிக்கை விடுத்துள்​ளது.

ஆபிர​காம் லிங்​கன், ஜெரால்டு ஆர் போர்​டு, ட்ரி​போலி உட்பட23 போர்க்​கப்​பல்​கள் மற்றும் 2 நீர்​மூழ்​கி கப்பல்​கள் மத்​திய கிழக்கு பகு​தி​யில் முகாமிட்டு உள்​ளன. இந்த போர்க் ​கப்​பல்​கள், நீர்​மூழ்​கி​ கப்பல்கள் மூலம் ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் இரு​புற​மும் தடுப்பு வேலி அமைக்​கப்​படும். இவை தவிர 10 கண்​காணிப்பு ட்ரோன்​கள், கண்​காணிப்பு விமானங்​களும் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​படும்.

அமெரிக்க கடற்​படை​யின் 3 கப்​பல்​கள் ஹார்​முஸ் பகு​தி​யில் கண்​ணிவெடிகளை அகற்​றும் பணியை தொடங்கி உள்​ளன. மேலும் 2 கப்​பல்​கள் ஜப்​பானில் இருந்து ஹார்​முஸ் பகு​திக்கு வரு​கின்​றன. அந்த கப்​பல்​களும் கண்ணி வெடியை அகற்​றும் பணி​யில் ஈடு​படுத்​தப்​படும் என்று அமெரிக்க ராணுவ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

‘ட்ரம்ப் உத்​தர​விட்​டால், அடுத்த நொடியே ஈரான் மீது மிகப்​பெரிய தாக்​குதல்​களை நடத்த தயா​ராக இருக்​கிறோம்’ என்று இஸ்​ரேல் ராணுவ வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இதற்கிடையே, ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்டதால், கச்சா எண்​ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்​துள்ளது. சர்​வ​தேச சந்​தை​யில் நேற்று முன்​தினம் ஒரு பேரல் கச்சா எண்​ணெய் 96.57 டாலருக்கு விற்​கப்​பட்​டது. ஜலசந்தி மூடலால் நேற்று ஒரு பேரல் கச்சா எண்​ணெய் 105 டாலருக்கு விற்​கப்​பட்​டது.

விலை மேலும் உயரும் அபாயம்: ‘‘அமெரிக்கா தனது தடையை முழு​மை​யாக நடை​முறைப்​படுத்​தி​னால் எண்​ணெய் விலை பேரலுக்கு 140 முதல் 150 டாலர் வரை உயரக் கூடும். ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டிருப்பது, ஒரு பிராந்திய மோதலை உலகளா​விய போராகமாற்​றக்​கூடும். இதன் மூலம் ஒரு நாளுக்கு 12 மில்​லியன் பேரல் எண்​ணெய் விநியோகம் பாதிக்​கப்​படலாம்’’ என்று ஓனிக்ஸ் கேபிடல் நிர்​வாக இயக்​குநர் ஜார்ஜ் மான்​டேபெக் கூறியுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், ‘ஹார்​முஸ் ஜலசந்​தியை நாங்​கள் மூடி விட்​டோம்.

எங்​களால் தடை செய்​யப்​பட்ட பகு​திக்​குள் ஈரான் கப்​பல்​கள் நுழைந்​தால், அவை தகர்க்​கப்​படும்’ என்று தெரி​வித்​துள்​ளார்​. ‘‘ஒரு​வேளை ஈரானுக்கு சீனா ஆயுதங்​கள் வழங்​கு​வது உறுதி செய்​யப்​பட்​டால் சீன பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதிக்​கப்​படும்’’ என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய கப்பல்களுக்கு.. ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க ஈரான் ராணுவ தரப்​பில் சுங்க கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது. இதுகுறித்து இந்​தி​யா​வுக்​கான ஈரான் தூதர் முகமது பதாலி டெல்​லி​யில் நேற்று கூறும்​போது, “இந்​திய கப்​பல்​களுக்கு நாங்​கள் சுங்க கட்​ட​ணம் வசூலிப்​பது கிடை​யாது. இதை நீங்​கள் இந்​திய அரசிடமே நேரடி​யாக கேட்டு தெரிந்து கொள்​ளலாம். இக்​கட்​டான சூழலிலும் இந்​தி​யா - ஈரான் இடையி​லான உறவு வலு​வாக இருக்​கிறது. ஹார்​முஸ் ஜலசந்​தியை இந்​திய கப்​பல்​கள் எவ்​வித பிரச்​சினை​யும் இன்றி கடந்து செல்ல அனு​மதி வழங்​கப்​படும். ஈரானின் நம்​பக​மான நட்பு நாடு​களில் இந்​தி​யா​வும் ஒன்​று” என்று தெரி​வித்​தார்.

ஈரான் துறை​முகங்​களில் இருந்து புறப்​படும் எண்​ணெய் கப்​பல்​களை மட்​டுமே தடுத்து நிறுத்​து​வோம் என்று அமெரிக்கா அறி​வித்​துள்​ளது. வளை​குடா நாடு​களிடம் இருந்து இந்​தியா அதிக அளவில் கச்சா எண்​ணெய், எரி​வா​யுவை இறக்​குமதி செய்​கிறது. எனவே அங்கிருந்து புறப்​படும் இந்​திய கப்​பல்​கள் எவ்​வித தடை​யும் இன்றி ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்​கும் என்று எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

<div class="paragraphs"><p>ஈரான் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளால் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் சுமார் 3,200 சரக்கு, எண்ணெய் கப்பல்கள் பரிதவித்து வருகின்றன. இந்த கப்பல்களில் 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள், ஊழியர்கள் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஸ் அல்-கைமா துறைமுகம் அருகே ஒரு சரக்கு கப்பல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கிறது. படம்: ஏஎப்பி</p></div>
தன்னை இயேசுவாக சித்தரிக்கும் ஏஐ படத்தை பதிவிட்ட ட்ரம்ப்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in