தன்னை இயேசுவாக சித்தரிக்கும் ஏஐ படத்தை பதிவிட்ட ட்ரம்ப்

தன்னை இயேசுவாக சித்தரிக்கும் ஏஐ படத்தை பதிவிட்ட ட்ரம்ப்
Updated on
1 min read

வாஷிங்டன்: கத்​தோலிக்க திருச்​சபை தலை​வர் போப் பற்றி விமர்​சனம் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அடுத்த சில மணி நேரங்​களில், தன்னை இயேசு​வாக சித்​தரிக்​கும் ஏஐ புகைப்​படத்தை சமூக வலை​தளத்​தில் பதிவேற்​றம் செய்​துள்​ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேற்று முன்​தினம் கத்​தோலிக்க திருச்​சபை​யின் தலை​வர் போப் 14-ம் லியோ பற்றி செய்​தி​யாளர்​களிட​மும் சமூக வலை​தளங்​களி​லும் பல்​வேறு விமர்​சனங்​களை முன்​வைத்​தார். தான் போப்​பின் ரசிகர் அல்ல என்​றும் அவர் சிறந்த முறை​யில் செயல்​பட​வில்லை என்​றும் கூறி​னார்.

மேலும் போப் மிக​வும் தாராள​வாதி என்​றும் தீவிர இடது​சா​ரி​கள் என்று அழைப்​பவர்​கள் மீது அதிக அனு​தாபம் கொண்​ட​வர் என்​றும் குற்​றம் சாட்​டி​னார். குறிப்​பாக அமெரிக்கா மற்​றும் வெளி​யுறவுக் கொள்கை தொடர்​பான பிரச்​சினை​களில் அரசி​யல் வர்​ணனை செய்​வதை விடுத்​து, போப் தனது ஆன்​மிகக் கடமை​களில் கவனம் செலுத்த வேண்​டும் என்​றும் ட்ரம்ப் தெரி​வித்​தார்.

இந்த விமர்​சனம் வெளிவந்த சில மணி நேரங்​களுக்​குப் பிறகு, செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மூலம் உரு​வாக்​கப்​பட்ட தனது படத்தை சமூக வலை​தளத்​தில் ட்ரம்ப் பதி​விட்​டார். அதில் இயேசுவைப் போன்ற தோற்​றத்​தில் உள்ள அவர், விவிலிய காலத்து அற்​புதத்​தைச் செய்​வது போல சித்​தரிக்​கப்​பட்​டிருந்​தார்.

அந்த படத்​தில், அவர் நீண்ட அங்​கி​களை அணிந்​து, நோய்​வாய்ப்​பட்ட ஒரு மனிதன் மீது தனது கையை வைத்​திருப்​பது போல​வும், பார்​வை​யாளர்​கள் மரி​யாதை​யுடன் பார்த்​துக் கொண்​டிருக்க அவரது விரல்​களி​லிருந்து ஒளி வீசுவது போல​வும் காட்​டப்​பட்​டிருந்​தது. இந்​தத் தோற்​றம், லாசரஸை இயேசு உயிர்த்​தெழுப்​பிய விவிலியக் கதையை எதிரொலித்​தது.

அப்​படத்​தைச் சுற்​றி​யுள்ள படங்​களில் அமெரிக்​கக் கொடிகள், ராணுவ விமானங்​கள், பறக்​கும் கழுகு​கள் மற்​றும் வானத்​தில் தேவதூதர்​களின் உரு​வங்​கள் இடம்​பெற்​றிருந்​தன. போப் பற்​றிய விமர்​சனத்​துக்​குப் பிறகு இந்​தப் படம் வெளி​யான​தால், இது விரை​வாக மக்​களின் கவனத்தை ஈர்த்​தது.

முன்​ன​தாக, ஈரானுட​னான போர் சர்வ வல்​லமை கொண்​ட​வர் என்ற மாயையை உரு​வாக்​கும்​ முயற்​சி என்​று போப்​ 14-ம்​ லியோ விமர்​சித்​திருந்​​தார்​.

இதற்​குப்​ பதிலளித்​த ட்​ரம்​ப்​, எதிரி ​நாடு​கள்​ அணு ஆயுதங்​களைப்​ பெறு​வதை நி​யாயப்​படுத்​தும்​ ஒரு மதத்​ தலை​வரை விரும்​ப​வில்​லை என்​று தெரி​வித்​​தார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

தன்னை இயேசுவாக சித்தரிக்கும் ஏஐ படத்தை பதிவிட்ட ட்ரம்ப்
“ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்புவது குறித்து எனக்கு கவலையில்லை...” - ட்ரம்ப்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in