​போதைப் பொருள் கடத்தல் விவகாரம் குறித்து பேச கொலம்பியா அதிபருக்கு ட்ரம்ப் அழைப்பு

​போதைப் பொருள் கடத்தல் விவகாரம் குறித்து பேச கொலம்பியா அதிபருக்கு ட்ரம்ப் அழைப்பு
Updated on
1 min read

வாஷிங்​டன்: போதைப் பொருள் கடத்​தலில் ஈடு​படு​வ​தாக வெனிசுலா மீது தாக்​குதல் நடத்​திய அமெரிக்​கா, அந்நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ மற்​றும் அவரது மனை​வியை சிறைப்​பிடித்​தது. இவர்​கள் மீது அமெரிக்க நீதி​மன்​றத்​தில் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில் “கொலம்​பியா அதிபர் கஸ்​டவோ பெட்​ரோ​வும், கொக்​கைன் போதைப் பொருள் தயாரித்து அமெரிக்​கா​வில் விற்​கிறார். அவரால் இதை நீண்ட காலத்​துக்கு செய்ய முடி​யாது” என கொலம்​பி​யா​வுக்கு மிரட்​டல் விடுக்​கும் வகை​யில் அதிபர் ட்ரம்ப் கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் அதிபர் ட்ரம்ப் கூறும்போது, "கொலம்​பியா அதிபர் கஸ்​டவோ பெட்​ரோவுடன் போனில் பேசினேன். போதைப் பொருள் நில​வரம், இரு நாடு​கள் இடையே நில​வும் வேறு பிரச்​சினை​கள் குறித்து விளக்​கு​வதற்​காக அவர் என்​னிடம் பேசி​னார். அவரை நான் விரை​வில் வெள்ளை மாளி​கை​யில் சந்​திக்​க​வுள்​ளேன்​” என்றார்.

​போதைப் பொருள் கடத்தல் விவகாரம் குறித்து பேச கொலம்பியா அதிபருக்கு ட்ரம்ப் அழைப்பு
புரதத்துக்கு ‘யெஸ்’, சர்க்கரைக்கு ‘நோ’ - அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் அரசின் புதிய ‘டயட் சார்ட்’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in