ஈரான் ஏவுகணைகளில் ‘‘இந்திய மக்களுக்கு நன்றி’’

இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து ஈரான் ஏவுகணை மீது எழுதப்பட்டுள்ள வாசகம்.

இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து ஈரான் ஏவுகணை மீது எழுதப்பட்டுள்ள வாசகம்.

Updated on
1 min read

டெஹ்ரான்: ஈ​ரான் ராணுவ ஏவு​கணை​களில் ‘‘இந்​திய மக்​களுக்கு நன்​றி’’ என்ற வாசகம் எழுதப்​பட்டு இருக்​கிறது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே நடைபெறும் போரில் இந்​தியா நடுநிலை வகிக்கிறது. மேலும் போரை நிறுத்த இந்​திய அரசு சமரச முயற்​சி​யில் ஈடு​படுவ​தாக​வும் கூறப்படுகிறது.

கடந்த 4-ம் தேதி இலங்கை அருகே சென்று கொண்​டிருந்த ஈரானின் ஐஆர்​ஐஎஸ் லாவன் கப்​பலை அமெரிக்க நீர்​மூழ்கி ஏவு​கணை தாக்​கியது. இதில் 87 பேர் உயி​ரிழந்​தனர். இதைத் தொடர்ந்து இந்​திய பெருங்​கடல் பகு​தி​யில் நின்​றிருந்த 3 ஈரான் கப்​பல்​களை இந்​திய துறை​முகங்​களில் நிறுத்த சிறப்பு அனு​மதி வழங்​கப்​பட்​டது.

மேலும் ஈரான் மக்​களுக்கு உதவுவதற்​காக இந்​தி​யா​வில் இருந்து மருந்​துகள், நிவாரண பொருட்​கள் அனுப்பி வைக்​கப்​பட்​டன. காஷ்மீர் உட்பட இந்​தி​யா​வின் பல்​வேறு பகு​தி​களை சேர்ந்த மக்​கள் ஈரான் மக்​களுக்கு பெரு​மளவு நிதி​யுதவி வழங்கி வரு​கின்​றனர். போருக்கு பிறகு பிரதமர் நரேந்​திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி​யில் இரு​முறை முக்​கிய ஆலோ​சனை நடத்தி உள்​ளார்.

இதுதொடர்​பாக இந்​தி​யா​வுக்​கான ஈரான் தூதரகம் அண்​மை​யில் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இந்​தி​யா​வின் அன்​பு, மனிதநே​யத்தை ஒரு​போதும் மறக்க மாட்​டோம். இந்​திய மக்​களின் அன்​புக்கு நன்​றிக் கடன்​பட்​டிருக்​கிறோம்’’ என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த சூழலில் ஈரானின் ஏவு​கணை​களில் ‘‘இந்​திய மக்​களுக்கு நன்​றி’’ என்ற வாசகம் எழுதப்​பட்டு இருக்​கிறது. இந்த புகைப்​படத்தை இந்​தி​யா​வுக்​கான ஈரான் தூதரகம் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டது. மேலும் ஈரானுக்கு எதி​ரான போரில் ஜெர்​மனி, ஸ்பெ​யின் உள்​ளிட்ட நாடு​கள் அமெரிக்கா​வுக்கு ஆதரவு அளிக்க திட்​ட​வட்​ட​மாக மறுத்​து​விட்​டன. இதன்​காரண​மாக ஈரான் ஏவு​கணை​களில் ஸ்பெ​யின், ஜெர்​மனி மக்​களுக்கு நன்றி என்ற வாசகங்​களும் எழுதப்​பட்டு உள்​ளன. அதோடு பாகிஸ்​தானுக்​கும் ஈரான்​ அரசு நன்​றி தெரி​வித்​திருக்​கிறது.

<div class="paragraphs"><p>இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து ஈரான் ஏவுகணை மீது எழுதப்பட்டுள்ள வாசகம்.</p></div>
திருநர் மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in