பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: நீண்ட கால​மாக சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்​-இ-இன்சாப் (பிடிஐ) கட்​சி​யின் தலை​வரு​மான இம்ரான் கானின் உடல்​நிலை தொடர்ந்து மோசமடைந்து வரு​வதை அடுத்​து, அவரை உடனடி​யாக மருத்​து​வ​மனைக்கு மாற்​று​மாறு பாகிஸ்​தான் உச்ச நீதி​மன்​றம் நேற்று அந்​நாட்டு அரசுக்கு அதிரடி உத்​தர​விட்​டுள்​ளது.

இது குறித்து இம்​ரான் கானின் வழக்​கறிஞர் நயீம் ஹைதர் பஞ்​சுதா கூறுகை​யில், “நீண்ட காலம் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள இம்​ரான் கானை அடுத்த 48 மணி நேரத்​திற்​குள் ஷிஃபா சர்​வ​தேச மருத்​து​வ​மனைக்கு மாற்​றி, வரும் செப்​டம்​பர் 16-ம் தேதி வரை அங்கு அவருக்கு உரிய சிகிச்​சைகளை அளிக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யுள்​ளது” என்​றார்.

உச்ச நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தரவை பி.டி.ஐ. கட்சி வரவேற்றுள்ளது. கட்​சி​யின் செய்​தித் தொடர்​பாளர் சுல்ஃபி​கார் புஹாரி கூறுகை​யில், “நீ​தி​மன்​றத்​தின் இந்த உத்​தரவு மிக​வும் வரவேற்​புக்​குரியது. அவரது கண் பார்​வை​யும் ஒட்​டுமொத்த உடல்​நலனும் மேலும் மோசமடைவதற்கு முன்​பாகவே இந்த உத்​தரவு வந்​திருக்க வேண்​டும். மருத்​து​வர்​கள் முழு திருப்தி அடை​யும் வரை அவர் மருத்​து​வ​மனை​யிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற வேண்​டும்” என்று வலி​யுறுத்​தி​னார்.

இதனிடையே, பாகிஸ்​தான் முன்​னாள் அதிபர் ஆரிஃப் ஆல்​வி தனது எக்ஸ் தள பதிவில், “இம்​ரான் கானுக்கு மன அழுத்​தம், அதிக ரத்த அழுத்​தம் மற்​றும் சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பாதிப்​பு​கள் தீவிரமடைந்​துள்​ளன. தனிமைச் சிறை அவரது உடலள​விலும் மனதள​விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடி​யாகச் சுதந்​திர​மான மருத்​து​வக் குழுவின் கண்​காணிப்​பில் அவருக்கு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளிக்​கப்பட வேண்​டும்​” எனக்​ கேட்​டுக்​கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்திய தேர்தல் நடைமுறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in