இந்திய - சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளதாக சீனா தகவல்

சீன எல்லையை ஒட்டிய அருணாச்சலப் பிரதேச பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவம்

சீன எல்லையை ஒட்டிய அருணாச்சலப் பிரதேச பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவம்

Updated on: 
1 min read

பெய்ஜிங்: இந்திய - சீன எல்லைப் பகுதிகளில் நிலைமை பொதுவாக சீராக இருப்பதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளரும், மக்கள் விடுதலை ராணுவத்தின் மூத்த கர்னலுமான சென் ஷி தெரிவித்துள்ளார்.

எல்லையின் கிழக்குப் பகுதியில் சமீபகாலமாக நிலவும் பதற்றங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சென் ஷி, “இரு தரப்பினரும் தூதரக மற்றும் ராணுவ வழிகள் மூலமும், தளபதிகள் நிலையிலான பேச்சுவார்த்தைகள் மூலமும் தொடர்பை பேணி வருகின்றனர். இதன்மூலம், இரு தரப்பும் ஒப்புக்கொண்ட உடன்படிக்கைகளைச் செயல்படுத்தவும், எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவும் முயற்சி செய்கின்றனர்.

அந்த வகையில், எல்லைப் பகுதிகளில் நிலைமை பொதுவாக சீராக உள்ளது. அதேநேரத்தில், இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கியுள்ள அருணாச்சலப் பிரதேசம் என்று அழைக்கப்படுவதை சீனா அங்கீகரிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

சீனா உடனான இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பதற்றத்தைக் குறைக்கவும், கடுமையான குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாக எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள படைகளுக்கு இடையே மோதல்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்தியாவும், சீனாவும் கடந்த 24-ம் தேதி கார்ப்ஸ் கமாண்டர் நிலையிலான பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்தன.

நவ.8-ம் தேதி தொடங்கிய இந்த ரகசிய பேச்சுவார்த்தைகள் சுமார் 10 நாட்கள் நீடித்தன. இந்த பேச்சுவார்த்தைகள் சுமுகமான சூழலில் நடைபெற்றதாகக் கூறப்பட்டாலும், குளிர்காலம் முழுமையாக தொடங்குவதற்கு முன்பாக விவாதிக்கப்பட்ட நடவடிக்கைகள் களத்தில் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை” என தெரிவித்துள்ளன.

சமீபத்திய இந்த பேச்சுவார்த்தைகள், இரு தரப்பினருக்கும் இடையே செயல்பாட்டு நெறிமுறைகளை உருவாக்குதல், படைகளுக்கு இடையே மோதல்கள் மற்றும் தவறான புரிதல்களைத் தவிர்த்தல், தகவல் தொடர்பு வழிகளைத் தொடர்ந்து திறந்து வைத்தல், எல்லைப் பகுதியில் பதற்றத்தைக் குறைத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டன. இரு நாடுகளும் இப்பகுதியில் பெருமளவிலான படைகளைக் குவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>சீன எல்லையை ஒட்டிய அருணாச்சலப் பிரதேச பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவம்</p></div>
“சிபிஐ விசாரணை கேட்பது திமுகவின் இரட்டை நிலைப்பாடு” - அமைச்சர் அருண்ராஜ்

X