ட்ரம்ப் மீது பாலியல் புகார் - புதிய ஆவணங்கள் வெளியீடு

ட்ரம்ப் மீது பாலியல் புகார் - புதிய ஆவணங்கள் வெளியீடு
Updated on
1 min read

வாஷிங்டன்: மறைந்த தொழில​திபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்​பான பாலியல் வழக்​கில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தமக்கு உடல்​ரீ​தி​யாக தொல்லை அளித்​த​தாகப் பெண் ஒரு​வர் தெரி​வித்​துள்ள புதிய புகார்கள் அடங்​கிய எப்ஸ்டீன் கோப்​பு​களை அமெரிக்க நீதித்​துறை வியாழக்​கிழமை வெளி​யிட்​டது.

மறைந்த பாலியல் குற்​ற​வாளி எப்​ஸ்​டீன் மூலம் ட்ரம்ப் தமக்கு அறி​முக​மான​தாக​வும், அதன் பிறகு அவர் தமக்கு பாலியல் ரீதி​யாகத் துன்​புறுத்​தல் அளித்​த​தாக​வும் அந்​தப் பெண் எப்​பிஐ அதி​காரி​களிடம் அளித்த வாக்​குமூலத்​தில் தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு அந்​தப் பெண்​ணிடம் எப்​பிஐ நடத்திய பலகட்ட விசா​ரணை​களின் விவரங்​கள் தற்​போது வெளி​யாகி​யுள்​ளன. அதில், தமக்கு 13- 15 வயது இருக்​கும்​போது எப்​ஸ்​டீன் மற்​றும் ட்ரம்ப் ஆகிய இரு​வ​ராலும் தாம் பாதிக்​கப்​பட்​ட​தாக அந்​தப் பெண் கூறி​யுள்​ளார்.

எப்​ஸ்​டீன் தன்னை நியூஜெர்​சிக்கு அழைத்​துச் சென்று ட்ரம்ப்​புக்கு அறி​முகம் செய்து வைத்​த​தாக​வும், அப்​போது தமக்கு நேரிட்ட பாலியல் அத்​து​மீறலைத் தடுக்க முயன்​ற​போது தாம் அவரை கடித்​த​தாக​வும் அந்​தப் பெண் குறிப்பிட்​டுள்​ளார்.

மேலும், இந்த விவ​காரத்​தில் மிரட்​டல் அழைப்​பு​கள் வந்ததாக​வும் அவர் தெரி​வித்​துள்​ளார். எனினும், ட்ரம்ப் இந்த குற்​றச்​சாட்​டு​களைத் திட்​ட​வட்​ட​மாக மறுத்​துள்​ளார். இதனிடையே, ட்ரம்ப்​புக்கு பாதிப்பை ஏற்​படுத்​தக்​கூடிய எப்​ஸ்​டீன் விசா​ரணை விவரங்​களை ட்ரம்ப் நிர்​வாகம் மறைப்​ப​தாக ஜனநாயகக் கட்​சி​யினர் குற்​றம் சாட்டியுள்ளனர்.

ட்ரம்ப் மீது பாலியல் புகார் - புதிய ஆவணங்கள் வெளியீடு
தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in