இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் மூத்த தளபதி உயிரிழப்பு

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் மூத்த தளபதி உயிரிழப்பு
Updated on
1 min read

டெஹ்ரான்: அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே நேற்று 21-வது நாளாக போர் நீடித்​தது. ஈரான் ராணுவத்​தின் இஸ்​லாமிய புரட்​சிகர பாதுகாப்பு படை (ஐஆர்​ஜிசி), அமெரிக்கா​வுக்கு எதி​ரான போரை வழிநடத்தி வரு​கிறது.

ஐஆர்​ஜிசி படை​யின் மூத்த தளப​தி​யாக​வும் செய்​தித் தொடர்​பாள​ராக​வும் அலி முகமது நைனி பணி​யாற்றி வந்தார். ஈரான் அரசு தொலைக்​காட்​சி​யில் அவர் நேற்று கூறுகையில், ‘‘ஏவு​கணை​கள் மூலம் எங்​களது எதிரிகளுக்கு தகுந்த பாடத்தை கற்​பிப்​போம். புதிய வகை ஏவு​கணை​களால் மிகப்​பெரிய தாக்​குதல்​ நடத்தி அதிர்ச்சி அளிப்​போம்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.

அவரது பேட்டி அரசு தொலைக்​காட்​சி​யில் ஒளிபரப்​பான சில மணி நேரங்​களில் இஸ்​ரேல் ராணுவம் ஏவு​கணை தாக்குதல்​களை நடத்​தி​யது. இதில் அலி முகமது நைனி உயி​ரிழந்​தார். அவரது மரணத்தை ஈரான் அரசு உறுதி செய்​திருக்​கிறது.

ஐஆர்​ஜிசி மூத்த தளபதி நைனி​யின் மரணத்​துக்கு பழி​வாங்​கும் வகை​யில் இஸ்​ரேலின் டெல் அவிவ், ஹைபா, ஜெருசலேம் உள்​ளிட்ட நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி​யது. மேலும் மத்​திய கிழக்​கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரானின் ட்ரோன்​கள் குண்​டு​களை வீசின. இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு கூறும்போது, ‘‘ஈரா​னால் இனிமேல் யுரேனி​யத்தை செறிவூட்ட முடி​யாது. பாலிஸ்​டிக் ஏவு​கணை​களை தயாரிக்​க​வும் முடி​யாது’’ என்றார்.

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் மூத்த தளபதி உயிரிழப்பு
உச்ச கட்டத்தில் ஈரான் போர்... நடப்பது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in