ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் கண்ணிவெடிகள் - ஈரான் வெளியிட்ட வரைபடத்தால் பதற்றம்

ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் கண்ணிவெடிகள் - ஈரான் வெளியிட்ட வரைபடத்தால் பதற்றம்
Updated on
1 min read

துபாய்: ஈ​ரானுக்​கும் அமெரிக்கா​வுக்​கும் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ஈரான் கடல் கண்​ணிவெடிகளைப் பதித்திருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்​நாட்டு செய்தி நிறு​வனங்​கள் வெளி​யிட்​டுள்​ளன. இது அப்​பி​ராந்​தி​யத்​தில் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

ஈரானின் புரட்​சிகர காவல்​படை​யுடன் நெருங்​கிய தொடர்புடைய ‘இஸ்​னா’ மற்​றும் ‘தஸ்​னிம்’ ஆகிய செய்தி நிறு​வனங்​கள் கடல் கண்​ணிவெடிகள் தொடர்​பான வரைபடத்தை நேற்று வெளி​யிட்​டன. பாரசீக வளைகுடாவின் குறுகிய நுழைவுப் பகு​தி​யான ஹார்​முஸ் ஜலசந்​தி​யில், கப்​பல்​கள் வழக்​க​மாகப் பயணிக்​கும் பாதையை ‘ஆபத்​தான பகு​தி’ என பாரசீக மொழி​யில் அந்த வரைபடத்​தில் எழுதப்​பட்​டுள்​ளது.

இது, அப்​பகுதி வழி​யாக செல்​லும் உலக நாடு​களின் கப்பல்​களுக்கு இடையே பதற்​றத்தை ஏற்​படுத்தி உள்​ளது. 15 சரக்கு கப்பல்களுக்கு அனுமதி உலக அளவில் கச்சா எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வாயு வர்த்​தகத்​தில் 20 சதவீதம் ஹார்​முஸ் ஜலசந்தி பகுதி வழி​யாகவே நடை​பெறுகிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

சண்டை நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நாள் ஒன்றுக்கு 15 சரக்கு கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் கூறும் விதிமுறைகள் படி, குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே சரக்கு கப்பல்கள் செல்ல வேண்டும்.

ஈரான் போருக்கு முன்பு சர்வதேச கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையின்றி சென்றது போல் தற்போது செல்ல முடியாது. இந்த கட்டுப்பாடுகளால், சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்​ணெய் விலை மீண்​டும் பேரல் ஒன்றுக்கு 97 டாலரைத் தாண்​டியது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.9 சதவீதம் உயர்ந்து 97.46 டால​ராக வர்த்​தக​மானது. இந்​தியா மட்​டுமின்றி ஆசிய பங்​குச் சந்தைகளும் நேற்​று சரிவைச்​ சந்​தித்​தன.

ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் கண்ணிவெடிகள் - ஈரான் வெளியிட்ட வரைபடத்தால் பதற்றம்
மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in