மெக்கா பள்ளிவாசலில் முத்தமிட்டதற்காக வங்கதேசத்தினரை ரகசியமாக தூக்கிலிட்ட சவுதி அரசு

மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம்
மெக்கா பள்ளிவாசலில் முத்தமிட்டதற்காக வங்கதேசத்தினரை ரகசியமாக தூக்கிலிட்ட சவுதி அரசு
Updated on: 
1 min read

மெக்கா: சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள பள்ளிவாசலில் முத்​தமிட்டு ஒழுக்​கக்​கேடான செயலில் ஈடுபட்டதாக 2 வங்கதேச தொழிலா​ளர்​கள் தூக்​கி​லிடப்​பட்ட விவகாரம் உலக அளவில் கொந்​தளிப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சவுதி அரேபியாவின் மெக்கா பள்​ளிவாசலுக்​குள் ஒழுக்​கக்​கேடான செயல்​களில் ஈடு​பட்​ட​தாகக் கூறி நஸ்​ருல் இஸ்​லாம் அப்துல் பசீர், சிட்டி அக்​தர் ஆகிய இரு வங்​கதேச நாட்​டினருக்கு கடந்த 14ம் தேதி மரண தண்​டனை நிறைவேற்​றப்​பட்​ட​தாக அங்குள்ள ஊடகங்​கள் செய்தி வெளி​யிட்​டன.

நஸ்ருலின் தந்தை கூறுகை​யில், “எனது மக​னுக்கு சரியான நீதி விசா​ரணை வழங்​கப்​பட​வில்லை. நியாயமின்றி என் மகன் கொல்லப்​பட்​டிருந்​தால் எனக்கு நீதி வேண்​டும்” எனக் கண்ணீருடன் தெரி​வித்​துள்​ளார். இரு​வரும் தம்​ப​தி​கள் என்​றும், பள்​ளிவாசலுக்​குள் கணவன் மனைவி நெற்​றி​யில் முத்தமிட்டதற்காகவே இந்​தத் தண்​டனை வழங்​கப்​பட்​ட​தாகவும் ஒரு தரப்​பினர் கூறுகின்​றனர்.

ஆனால், நைஜீரியாவைச் சேர்ந்த பிரபல பதிவர் எம்.சி. அல்​ஹாஜி, “நானும் எனது மனைவியும் மெக்கா பள்​ளிவாசல் அரு​கில் பலமுறை அன்​பைப் வெளிப்​படுத்​தி​யிருக்​கிறோம். நெற்​றி​யில் முத்​தமிட்​டதற்​காக மரண தண்​டனை வழங்​கப்​பட்​டது என்​பது முற்​றி​லும் இணை​யத்​தில் பரப்​பப்​படும் வதந்​தி​. சவுதி அரசு அவர்​கள் செய்த உண்​மையான குற்​றம் என்ன என்​பதை வெளிப்​படை​யாக அறி​விக்​காததே குழப்​பங்​களுக்​கு் காரணம்” என்று பதிவிட்​டுள்​ளார்.

வங்​கதேச வெளி​யுறவு் இணை​யமைச்​சர் ஷாமா ஒபாயித் இஸ்லாம் கூறுகை​யில்,“மரண தண்​டனை குறித்து எந்த தகவலும் சவுதி வழங்​க​வில்லை. ஊடகங்​கள் மூலமாகவே அறிந்து கொண்டோம்” என்றார்.

இதுகுறித்து சவுதி தூதரை நேரில் வரவழைத்து வங்​கதேச வெளியுறவு அமைச்​சகம் விளக்​கம் கேட்டுள்​ளது. சவுதி அரசின் இந்த நட​வடிக்கை மனித உரிமை செயற்​பாட்​டாளர்​களாலும், வங்​கதேச மக்​களாலும் கடுமையாக விமர்​சிக்​கப்​பட்டு வரு​கிறது.

மெக்கா பள்ளிவாசலில் முத்தமிட்டதற்காக வங்கதேசத்தினரை ரகசியமாக தூக்கிலிட்ட சவுதி அரசு
எல்நினோ பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை: வல்லுநர் குழு பரிந்துரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in