எல்நினோ பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை: வல்லுநர் குழு பரிந்துரை

எல்நினோ பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை: வல்லுநர் குழு பரிந்துரை
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் எல்​நினோ பாதிப்​பால் ஏற்​படும் மாற்​றங்​கள், அவற்றை எதிர்​கொள்ள எடுக்க வேண்​டிய நட​வடிக்​கைகள் குறித்து பரிந்​துரைக்க வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் தலை​மையில் பல்​வேறு அமைப்​பு​களின் பேராசி​ரியர்​கள் உள்​ளிட்​டோர் அடங்​கிய குழுவை தமிழக அரசு அமைத்​தது.

அக்​குழு தற்​போது முதல் கட்ட அறிக்​கையை அரசிடம் அளித்​துள்​ளது. அதில் கூறியிருப்பதாவது: எல்நினோ பாதிப்பு காரணமாக குடிநீர் பற்​றாக்​குறை, அணைகளுக்கு நீர்​வரத்து குறைந்து அத​னால் வறட்சி ஏற்​படுதல், வடகிழக்கு பரு​வ​மழை காலத்​தில் அதிக மழைப் பொழிவால் நகர்ப்​புறத்​தில் வெள்ள பாதிப்பு, அடுத்​தாண்டு வெயில் காலத்​தில் அதிக வெப்ப அலை வீசுதல், பொது​மக்​களின் உடல்​நிலைபாதிப்பு, பரு​வகாலம் சார்ந்த நோய்​கள் ஏற்​படுதல், நீர்​மின்​சக்தி மற்​றும் எரிசக்தி பாதி்ப்​பு​கள், நீண்​டகால பரு​வநிலை மற்​றும் பேரிடர் பாதிப்​பு​கள் ஏற்​படலாம்.

நீர்​வளத்​துறை​யானது, தற்​போதைய பரு​வ​மழை காலத்​தில், முக்​கிய​மான ஆறுகள், கால்​வாய்​கள், குளங்​கள் போன்​றவற்​றில் உள்ள மதகு​களை சரியாக பராமரிக்க வேண்​டும், ஆறுகள்,கால்​வாய்​கள் முக்​கிய​மான நீர் போக்​கி​களை தூர்​வார வேண்​டும், நீண்​டகால முயற்​சி​யாக, வெள்ள பாதிப்பை குறைப்​ப​தற்​கான நட​வடிக்​கையை எடுக்க வேண்​டும்.

மழைநீர் கால்​வாயில் கழிவுநீர், தொழிற்​சாலைக் கழிவு​கள், திடக்​கழிவு​கள் கலப்​பதை தடுக்க வேண்​டும். பாது​காப்​பான குடிநீர் வழங்​கு​வதை உறுதி செய்ய வேண்​டும். குடிநீர் விநியோகத்தை முறை​யாக மேற்​கொள்​வதுடன், மழைநீர் சேகரிப்பு, மறு​பயன்​பாடு ஆகிய​வற்றை மேம்​படுத்த வேண்​டும்.

மேலும், வேளாண் துறை​யில், வேளாண்- பரு​வகால எச்​சரிக்​கையை விவசாயிகளுககு வழங்க வேண்​டும், பொது போக்​கு​வரத்து, மெட்ரோ ரயில் போன்ற அமைப்​பு​களுக்கு தேவை​யான மின்​சா​ரத்தை மின்​துறை வழங்க வேண்​டும்.

வெள்ள அபாயம் மற்​றும் கடற்​கரையோரங்​களில் உள்ள மின்​நிலை​யங்​களை தொடர்ந்து கண்​காணிக்க வேண்​டும். வெயில் காலத்​துக்கு ஏற்ற மின்​சார மேலாண்​மையை உரு​வாக்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட பல்​வேறு பரி்ந்​துரைகளை பொதுப்​பணித்​துறை, பள்​ளிக்​கல்​வித்​துறை, இந்​திய வானிலை ஆய்வு மையம், தோட்​டக்​கலைத்​துறை உள்​ளிட்ட பல்வேறு துறைகள் வாரியாக வல்​லுநர் குழு அளித்​துள்​ளது.

எல்நினோ பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை: வல்லுநர் குழு பரிந்துரை
மதுராந்தகம், தாராபுரம் வளர்ச்சிக்காக ரூ.1,545 கோடி திட்டங்கள்: முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in