உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமரின் ஊதியம் ரூ.27 கோடியாக உயர்கிறது

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமரின் ஊதியம் ரூ.27 கோடியாக உயர்கிறது
Updated on
1 min read

சிங்கப்பூர்: உல​கிலேயே அதிக சம்​பளம் வாங்​கும் சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்​கின் ஆண்டு ஊதி​யம் ரூ.16.05 கோடி​யில் இருந்து ரூ.27 கோடி உயர்த்​தப்பட உள்​ளது.

சிங்​கப்​பூர் அரசு, திறமை​யானவர்​களை அரசி​யலுக்​குக் கொண்டு வரவும், நல்ல நிர்​வாகத்தை உறுதி செய்​யும் வகை​யிலும் அரசி​யல் தலை​வர்​களுக்கு ஊதிய உயர்வை அறி​வித்​துள்​ளது.

இதன்​படி, பிரதமர் லாரன்ஸ் வோங்​கின் நிர்​ண​யிக்​கப்​பட்ட ஆண்டு ஊதி​யம் ரூ.16.05 கோடியில் இருந்து ரூ.27 கோடியாக அதி​கரிக்க உள்​ளது. ஏற்​கெனவே உலகின் அதிக சம்​பளம் பெறும் பிரதம​ராக சிங்​கப்​பூர் பிரதமர் உள்ள நிலை​யில், மேலும் 64% ஊதிய உயர்வு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது​போல அந்​நாட்டு துணைப் பிரதமரின் நிர்​ண​யிக்​கப்​பட்ட ஆண்டு ஊதி​யம் ரூ.14.02 கோடி​யில் இருந்து ரூ.22.94 கோடி வரை அதி​கரிக்​கிறது. கேபினட் அமைச்​சர்​களின் ஊதி​யம், அவர்​களின் பதவி மூப்பு மற்​றும் பொறுப்​பு​களுக்கு ஏற்ப சுமார் ரூ.13.5 கோடி முதல் சுமார் ரூ.21.59 கோடி வரை உயர்த்​தப்​படும். எனினும், இவை நிர்​ண​யிக்​கப்​பட்ட ஊதிய அளவு​கள் மட்​டுமே.

அமைச்​சர்​கள் அனை​வரும் உடனடி​யாக இந்த முழுத் தொகை​யை​யும் பெற​மாட்​டார்​கள். அக்​.15 முதல் ஒரு​முறை அதி​கபட்​ச​மாக 9% ஊதிய உயர்வு வழங்​கப்​படும். அதன் பின்​னர், ஊதிய மாற்​றங்​கள் தனி​நபரின் செயல்​திறன் மற்​றும் பொறுப்​பு​களின் அடிப்​படை​யில் இருக்​கும்.

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமரின் ஊதியம் ரூ.27 கோடியாக உயர்கிறது
துலீப் டிராபி: தென் மண்டலம் 336 ரன்களுக்கு ஆட்டமிழப்பு - கிழக்கு மண்டலம் பட்டத்தை கைப்பற்றுகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in