குடியரசு கட்சி தோல்வி: வலைதளங்களில் ட்ரம்பை விமர்சித்து மீம்ஸ்

குடியரசு கட்சி தோல்வி: வலைதளங்களில் ட்ரம்பை விமர்சித்து மீம்ஸ்
Updated on: 
1 min read

வாஷிங்டன்: உலக நாடுகள் மிகவும் ஆவலு டன் எதிர்பார்த்த அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் இதுவரை வெளியான முடிவுகளில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

அதிபர் ட்ரம்பின் ஆளும் குடியரசு கட்சி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள் ளது. இது ட்ரம்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஜனநாயகக் கட்சி ஆதரவின்றி எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத சூழல் ஏற்படும் என கருதப்படுகிறது.

குடியரசு கட்​சி​யின் தோல்​வியை விமர்​சிக்​கும் வகை​யி​லான மீம்​ஸ்​கள், செயற்கை நுண்​ணறிவு மூலம் உரு​வாக்​கப்​பட்ட வீடியோக்கள் மற்​றும் பழைய புகைப்​படங்​கள் சமூக வலைதளங்களில் புயலெனக் குவிந்து வரு​கின்​றன.

நாடாளுமன்றத்​தின் மேல​வை​யான செனட் சபையில் குடியரசுக் கட்​சி​யின் வசமிருந்த முக்​கிய தொகுதி​களைக் கைப்​பற்​றிய எதிர்க்​கட்​சி​யான ஜனநாயகக் கட்சி, கீழவை​யான பிரதி​நி​தி​கள் சபையையும் தன்​வச​மாக்கி பிரம்​மாண்ட ‘நீல அலை’ வெற்​றியப் பதிவு செய்​துள்​ளது.

அதிபர் ட்​ரம்​பின் எஞ்​சிய 2 ஆண்டு பத​விக் காலத்​தில், நாடாளுமன்​றத்​தின் இரு அவை​களின் அதி​காரத்​தையும் ஜனநாயகக் கட்​சி​யிடம் அமெரிக்க வாக்​காளர்​கள் ஒப்படைத்துள்ளனர். முழு அதி​கார​மும் ஒரே கட்​சி​யின் கைக்கு மாறி​யிருப்​பது, ட்​ரம்ப் நிர்வாகத்துக்​கும் குடியரசுக் கட்​சிக்​கும் விழுந்த பலத்த அடி​யாக கருதப்படுகிறது.

இதனிடையே, தேர்​தல் முடிவு​களை ஏற்​ப​தாகவும், ஜனநாயகக் கட்​சி​யுடன் இணைந்து பணி​யாற்​றத் தயாராக இருப்​ப​தாகவும் ட்​ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

குடியரசு கட்சி தோல்வி: வலைதளங்களில் ட்ரம்பை விமர்சித்து மீம்ஸ்
அமெரிக்க இடைக்கால தேர்தலில் முக்கிய பதவிகளுக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்

X