ரிலையன்ஸ் ஆதரவுடன் டெக்சாஸில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைகிறது: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸில் 300 பில்லியன் டாலர் மதிப்பில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இதுகுறித்து ட்ரூத் சமூக வலைதளத்தில் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதையும், சர்வதேச கூட்டாளிகளுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 300 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக டெக்சாஸின் பிரவுன்ஸ்வில்லில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

இந்த மகத்தான முதலீட்டுக்கு இந்தியாவில் உள்ள எங்கள் கூட்டாளிகளுக்கும், அவர்களின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸுக்கும் நன்றி. இந்தத் திட்டம் நாட்டின் எரிசக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்.

இப்போது அமெரிக்கா உண்மையான ஆற்றல் ஆதிக்கத்திற்குத் திரும்புகிறது. இன்று டெக்சாஸின் பிரவுன்ஸ்வில்லில் 50 ஆண்டுகளில் முதல் புதிய அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைகிறது என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

300 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரியது. இது ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி தெற்கு டெக்சாஸில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

பிரவுன்ஸ்வில் துறைமுகத்தில் அமையும் இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் அமெரிக்க சந்தைகளுக்கு முக்கிய பங்களிக்கும். நமது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், அமெரிக்க எரிசக்தி உற்பத்தியையும் அதிகரிக்கும்.

‘அமெரிக்கா முதலில்’ என்பதுதான் எங்களின் கொள்கை, அனுமதிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வரிகளைக் குறைத்தல் ஆகியவற்றின் காரணமாகவே, பில்லியன் கணக்கான டாலர் ஒப்பந்தங்கள் நமது நாட்டிற்கு மீண்டும் வருகின்றன” என்றார்.

மத்திய கிழக்கில் ஈரானுக்கும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது.

<div class="paragraphs"><p>அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்</p></div>
எரிவாயு தட்டுப்பாடு: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in