“போரை நிறுத்த சிறந்த ஆலோசனை வழங்கினார் பிரதமர் மோடி” - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புகழாரம்

“இந்தியாவின் பன்முகத்தன்மை உலகத்துக்கே முன்னுதாரணம்”
“போரை நிறுத்த சிறந்த ஆலோசனை வழங்கினார் பிரதமர் மோடி” - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புகழாரம்
Updated on: 
1 min read

மாஸ்கோ: இந்​தி​யா​வின் பன்​முகத்​தன்மை ஒட்​டுமொத்த உலகத்​துக்​கும் முன்​னு​தா​ரண​மாக விளங்​குவதாகவும் போரை நிறுத்த பிரதமர் மோடி சிறந்த ஆலோ​சனை வழங்​கி​யதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரி​வித்​துள்​ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் நடை​பெற்ற சர்​வ​தேச ரஷ்யநிபுணர்​களின் வால்​டாய் மன்​றக் கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: இந்​தி​யா​வில் சுமார் 150 கோடி மக்​கள் வசிக்​கின்​ற​னர். அவர்களில் சுமார் 60 கோடி பேர் இந்திபேசுகின்​ற​னர். இதர மக்​கள் பல்​வேறு மொழிகளைப் பேசுகின்​ற​னர். இனம், மொழி, கலாச்சார ரீதி​யாக பன்​முகத்​தன்மை கொண்ட நாடாக இந்​தியா விளங்​கு​கிறது. ஆனால் இந்​திய மக்​கள் அனை​வ​ரும் ஒற்​றுமை​யுடன் வாழ்​கின்​ற​னர்.

வேற்​றுமை​யில் ஒற்​றுமை என்ற கொள்​கையை இந்திய மக்​கள் கடைப்​பிடிக்​கின்​ற​னர். இதன்​மூலம் ஒட்​டுமொத்த உலகத்​துக்​கும் இந்​தியா முன்​னு​தா​ரண​மாக விளங்​கு​கிறது. உலக நாடு​கள் இந்​தி​யா​விடம் இருந்து படிப்​பினை​களை கற்​க வேண்​டும். இந்​திய பிரதமர் மோடி எனது மிகச் சிறந்த நண்​பர். உக்​ரைன் போரை நிறுத்த பலமுறை அவர் என்​னிடம் பேசினார். போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க மிகச் சிறந்த ஆலோ​சனை​களை​யும் வழங்கி உள்​ளார். இதற்​காக அவருக்கு நன்​றி கூறு​கிறேன்.

ரஷ்​யா​வுக்கு எதி​ராக போர் தொடுக்க மேற்​கத்​திய நாடு​கள் திட்​ட​மிட்டுள்​ளன. இதற்​காக பால்​டிக் கடல் பகு​தி​யில் ஒத்​தி​கை​யும் நடத்தி வரு​கின்​றன. அவ்​வப்​போது ரஷ்ய கப்​பல்​களை​யும் பறி​முதல் செய்து வரு​கின்​றன. ரஷ்​யா​வின் ஏதாவது ஒரு பகுதிமீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டால் எங்​களிடம் இருக்​கும் அனைத்து ஆயுதங்​களை​யும் பயன்​படுத்​து​வோம். இவ்​வாறு பேசினார்.

கடந்த 2022-ம் ஆண்டு செப்​டம்​பரில் உஸ்​பெகிஸ்​தானில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் உச்சி மாநாடு நடை​பெற்​றது. அப்​போது அதிபர் புதினை சந்​தித்த மோடி, “இது போருக்​கானகாலம் அல்ல” என்று நேரடி​யாக வலி​யுறுத்​தி​னார்.

கடந்த 2024-ல் மாஸ்கோ​வில் இந்​திய- ரஷ்ய உச்சி மாநாடு நடை​பெற்​றது. அப்​போது அதிபர் புதினுடன் பேசிய பிரதமர் மோடி, “உக்​ரைன் போரை நிறுத்த அமை​திப் பேச்​சு​வார்த்​தையை தொடங்​குங்​கள்” என்று வலி​யுறுத்​தி​னார். கடந்த 2025-ல் சீனா​வில் நடந்த ஷாங்​காய் உச்சி மாநாட்​டிலும் கடந்த ஆகஸ்​டில் கிர்​கிஸ்​தானில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டிலும் இதே கருத்தை புதினிடம் பிரதமர் மோடி எடுத்​துரைத்​தார். கடந்த செப்​டம்​பரில் டெல்​லி​யில் நடை​பெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின்​போதும் உக்​ரைன் போரை நிறுத்த புதினிடம் மோடி வற்​புறுத்​தி​னார்.

“போரை நிறுத்த சிறந்த ஆலோசனை வழங்கினார் பிரதமர் மோடி” - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புகழாரம்
தாராபுரத்தில் இன்று விஜய் 30 கி.மீ. ‘ரோடு ஷோ’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in