தாராபுரத்தில் இன்று விஜய் 30 கி.மீ. ‘ரோடு ஷோ’

தாராபுரத்தில் இன்று விஜய் 30 கி.மீ. ‘ரோடு ஷோ’
Updated on: 
1 min read

தாராபுரம்: ​திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் இடைத்​தேர்தலில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் சத்ய​பா​மாவை ஆதரித்​து, தமிழக முதல்வர் விஜய் இன்று தாராபுரத்​தில் பிரம்​மாண்ட ‘ரோட் ஷோ’ மூலம் பிரச்சாரம் செய்கிறார்.

இதற்​காக, கோவை விமான நிலை​யத்​தில் இருந்து ஹெலி​காப்​டர் மூலம் தாராபுரம் வரும் முதல்வர் விஜய், தாராபுரம் - உடுமலை சாலை​யில் உள்ள மாருதி நகர் பகு​தி​யில் அமைக்கப்பட்​டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்​கு​கிறார். அங்​கிருந்து மூலனூர் வரை சுமார் 30 கிலோ மீட்​டர் தொலை​வுக்கு திறந்த வாக​னத்​தில் ‘ரோடு ஷோ’ சென்று வாக்கு சேகரிக்​கிறார்.

கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற சட்டப்​பேரவைத் தேர்தலில், பாஜக சார்​பில் போட்​டி​யிட்ட எல்​.​முரு​க​னுக்கு ஆதர​வாகப் பிரச்​சாரம் செய்ய பிரதமர் நரேந்​திர மோடி தாராபுரம் வந்​த​ போது, மாருதி நகர் பகு​தி​யில் மூன்று சிறப்பு ஹெலிபேடு​கள் அமைக்​கப்​பட்​டன.

தற்​போது அதே ஹெலிபேடைத் தூய்​மைப்​படுத்​தி, முதலமைச்​சர் விஜய்​யின் வரு​கைக்​காகத் தயார்​படுத்​தும் பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன. முதல்வரின் வரு​கை​யையொட்டி தாராபுரம் பகு​தி​யில் திருப்​பூர் மாவட்ட காவல்கண்​காணிப்​பாளர் சிருஷ்டிசிங் தலை​மை​யில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

செப்.30-ம் தேதி நடை​பெற்ற தேர்தல் பொதுக்​கூட்டத்தில் பேசிய முதல்​வர் விஜய், இன்று 2-வது முறை​யாக தா​ராபுரத்​துக்​கு வருகிறார்​. முன்​ன​தாக, சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் புறப்​பட்டு கோவைக்குக் காலை 9.10 மணிக்கு விஜய் வரு​கிறார். அதைத் தொடர்ந்து ஹெலி​காப்​டர் மூல​மாக, தாராபுரம் செல்​கிறார். பிரச்​சா​ரம் முடிந்து மாலை​யில் மீண்​டும் ஹெலி​காப்​டர் மூலம் கோவை வந்​து, விமானத்​தில் சென்னை புறப்​பட்​டுச் செல்​கிறார். வானிலை சரி​யில்லை என்​றால் சாலை மார்க்க​மாக செல்ல​வும் போலீ​ஸார் பாது​காப்பு ஏற்​பாடு​களைச் செய்​துள்​ளனர்​.

தாராபுரத்தில் இன்று விஜய் 30 கி.மீ. ‘ரோடு ஷோ’
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: தவெக, திமுக, அதிமுக தீவிர வாக்கு சேகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in