

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள பாதுகாப்புச் சாவடி ஒன்றில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் நேற்று காலை திடீரென சுடத் தொடங்கினார். உடனடியாக மத்திய பாதுகாப்புப் படையினர் களமிறங்கி 21 வயதுள்ள இளைஞரை சுட்டுக்கொன்றனர்.
இதுகுறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நமது நாட்டின் புனித சின்னத்தின் (வெள்ளை மாளிகை) மீது ஒருவித வெறி, வன்முறை உணர்வு கொண்டவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பு விருந்தின்போதும்கூட இதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றது.
வாஷிங்டனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பாதுகாப்பான தற்காப்புப் பகுதியை உருவாக்குவது, எதிர்கால அதிபர்கள் அனைவருக்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.