அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம்: அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம்: அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் 250-வது சுதந்​திர தினத்தை ஒட்டி அதிபர் ட்ரம்ப் மற்​றும் அமெரிக்க மக்​களுக்கு பிரதமர் மோடி வாழ்த்​துகளை தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 1776-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி பிரிட்​டனிடம் இருந்து அமெரிக்கா விடு​தலை அடைந்​தது. தற்​போது 250-வது சுதந்​திர தினத்தை அமெரிக்கா கொண்​டாடுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

வரலாற்று சிறப்​புமிக்க 250-வது சுதந்​திர தினத்தை அமெரிக்கா கொண்​டாடு​கிறது. இந்த நேரத்​தில் 140 கோடி இந்​தி​யர்​களின் சார்​பில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புக்​கும், அமெரிக்க மக்​களுக்​கும் மனமார்ந்த வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இந்​தி​யா, அமெரிக்கா இடையே மிக நெருங்​கிய நட்​புறவு நீடிக்கிறது. இரு நாடு​களின் மக்​களிடையே நெருக்​க​மான நட்பு நீடிக்கிறது.

இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் உலகத்​தின் நன்​மையை விரும்​பு​கின்​றன. 250-வது சுதந்​திர தினத்​தில் அமெரிக்கா செழித்​தோங்கி வளர​ வாழ்த்​துகிறேன். இந்த நேரத்​தில் இரு நாடு​கள் இடையி​லான உறவு புதிய உச்​சத்தை எட்ட வேண்​டும். இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்​.

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம்: அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா கமேனி உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள், தலைவர்கள் அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in