ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா கமேனி உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள், தலைவர்கள் அஞ்சலி

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா கமேனி உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள், தலைவர்கள் அஞ்சலி
Updated on
1 min read

டெஹ்ரான்: ஈ​ரானின் மறைந்த உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனி உடலுக்கு பல்​லா​யிரக்​கணக்​கான மக்​கள் இறுதி அஞ்​சலி செலுத்தி வரு​கின்​றனர்.

ஈரானின் உச்ச தலை​வ​ராக இருந்த அயத்​துல்லா அலி கமேனி கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்​திய கூட்​டுத் தாக்​குதலில் கொல்​லப்​பட்​டார். அவருடன் அவரது மூத்த மகள், மரு​மகன், மரு​மகள், 14 மாத பேத்தி ஆகியோ​ரும் கொல்​லப்​பட்​டனர். போர் தொடர்ந்​த​தால் அவர்​களின் இறு​திச் சடங்கு நடை​பெற​வில்லை.

தற்​போது போர் பதற்​றம் தணிந்​துள்ள சூழலில், தலைநகர் டெஹ்​ரானில் கமேனி உள்ளிட்ட உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு இறு​திச்​சடங்கு நிகழ்​வு​கள் நேற்று முன்​தினம் தொடங்​கின. அவர்​களின் உடல் பல்​வேறு நகரங்​களுக்கு எடுத்​துச் செல்​லப்​பட்டு வரும் 9-ம் தேதி மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா நினை​விடத்​தில் முறைப்​படி நல்​லடக்​கம் செய்​யப்பட உள்​ளது.

டெஹ்​ரானில் இமாம் கொமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் வைக்​கப்​பட்​டுள்ள கமேனி உடலுக்கு பல்​லா​யிரக்​கணக்​கான மக்​கள் திரண்டு வந்து கண்​ணீர் மல்க அஞ்​சலி செலுத்தி வரு​கின்​றனர். இந்நிகழ்​வில் அதிபர் பெசஷ்கி​யான் உள்​ளிட்ட ஈரானின் மூத்த தலை​வர்​கள் மற்​றும் ஆசி​யா, மத்​திய கிழக்கு மற்​றும் கிழக்கு ஐரோப்​பிய நாடு​களின் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​றனர்.

இதில் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாஃப், வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி ஆகிய இரு​வரும் கண்ணீரை கட்​டுப்​படுத்த முடி​யாமல் தவித்​தனர். இந்​தியா சார்​பில் வெளி​யுறவுத் துறை இணை அமைச்​சர் பபித்ரா மார்​கெரிட்​டா, பிஹார் ஆளுநர் சையது அதா ஹஸ்​னைன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா கமேனி உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள், தலைவர்கள் அஞ்சலி
‘தோல்வியின்றி வரலாறா’ - கேப் வெர்டே அணி விதைத்த நம்பிக்கை | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in