19 கோடி பார்​வை​யாளர்​களை கவர்ந்த மோடி - மெலோனி வீடியோ

19 கோடி பார்​வை​யாளர்​களை கவர்ந்த மோடி - மெலோனி வீடியோ
Updated on
1 min read

ரோம்: இத்​தாலி பிரதமர் ஜார்​ஜியா மெலோனிக்கு இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி சாக்​லெட் பரிசளித்​தார். இந்த வீடியோ 19 கோடி பார்​வை​யாளர்​களை கவர்ந்​துள்​ளது.

கடந்த 2023-ம் ஆண்டு துபா​யில் நடை​பெற்ற மாநாட்​டின்​போது இந்​தி​யா, இத்​தாலி பிரதமர்​கள் பங்​கேற்​றனர். அப்​போது பிரதமர் மோடி மற்​றும் இத்தாலி பிரதமர் மெலோனி பெயர்​களின் கலவையான மெலோடி என்ற வார்த்​தையை இத்​தாலி பிரதமர் மெலோனி உருவாக்​கி​னார்.

கடந்த 2024ம் ஆண்டு இத்​தாலி​யின் அபுலி​யா​வில் நடை​பெற்ற ஜி 7 உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி​யும், இத்​தாலி பிரதமர் மெலோனி​யும் இணைந்து செல்பி வீடியோவை வெளி​யிட்​டனர். இந்த மெலோடி வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவியது.

இந்த சூழலில் இத்​தாலி தலைநகர் ரோமில் நேற்று முன்​தினம் அரசு முறை பயணம் மேற்​கொண்ட பிரதமர் நரேந்​திர மோடி அந்த நாட்டு பிரதமர் ஜார்​ஜியா மெலோனியை சந்​தித்​துப் பேசினார். அப்​போது மெலோனிக்​கு, `மெலோடி' சாக்​லெட் பாக்கெட்டை பிரதமர் மோடி பரி​சாக வழங்​கி​னார்.

இதுதொடர்​பான செல்பி வீடியோவை மெலோனி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்​கத்​தில் பகிர்ந்​தார். அதில் அவர் கூறும்​போது, “பிரதமர் மோடி மிகச் சிறந்த பரிசைகொண்டு வந்​துள்​ளார்” என்​றார். உடன் இருந்த பிரதமர் மோடி புன்முறுவலுடன் `மெலோடி'என்று கூறி சாக்​லெட் பாக்​கெட்டை காண்​பித்​தார். இந்த வீடியோ இதுவரை 19 கோடி பார்வையாளர்களை கவர்ந்து உள்ளது.

19 கோடி பார்​வை​யாளர்​களை கவர்ந்த மோடி - மெலோனி வீடியோ
இந்திய அரசியலில் புதிய சூப்பர் ஸ்டார் ‘கரப்பான்பூச்சி’ - சிஜேபி எழுச்சி சொல்லும் சேதி என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in