அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி - சக பயணிகள், ஊழியர்கள் மடக்கிப் பிடித்தனர்

அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி - சக பயணிகள், ஊழியர்கள் மடக்கிப் பிடித்தனர்
Updated on: 
1 min read

பீனிக்ஸ்: அமெரிக்காவின் சான் டியாகோ​விலிருந்து புறப்​பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறு​வனத்​தின் ‘ஃபிளைட் 1494’ விமானம் நடு​வானில் பறந்து கொண்​டிருந்​தது. அப்​போது, தனது இருக்கையி​லிருந்து எழுந்து விமானத்​தின் முன்​பகு​திக்​குச் சென்ற ஒரு பயணி, விமானத்​தின் அவசரகால வெளி​யேறும் கதவைத் திறக்க முயன்​றார். அவரை இருக்​கைக்​குத் திரும்​பு​மாறு விமான ஊழியர்கள் விடுத்த அறி​வுறுத்​தல்​களை தொடர்ந்து புறக்கணித்தார்.

ஆபத்தை உணர்ந்த விமானப் பணிப்​பெண்​களும், சக பயணிகளும் உடனடி​யாகச் செயல்​பட்டு அந்த பயணி​யுடன் போராடி, அவரைத் தரை​யில் அழுத்​திப் பிடித்​துக் கட்டுப்படுத்தினர். விமானம் பீனிக்ஸ் ‘ஸ்கை ஹார்​பர்’ சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் பாது​காப்​பாகத் தரை​யிறக்கப்பட்டது. அப்போது பாது​காப்பு அதி​காரி​கள் அந்​தப் பயணியை விமானத்திலிருந்து இறக்கி அழைத்​துச் சென்​றனர்.

அதன்​பிறகு விமானம் மீண்​டும் சிகாகோ ஓ’ஹேர் சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்குப் புறப்​பட்​டுச் சென்​ற​தாக அமெரிக்க விமானப் போக்​கு​வரத்து நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. அந்​தப் பயணி உடனடி​யாகக் கைது செய்​யப்​பட​வில்லை என்​றாலும், இதுகுறித்து அமெரிக்​கப் புல​னாய்வு அமைப்​பான எஃப்​.பி.ஐ-க்​குத் தகவல் தெரிவிக்​கப்​பட்​டு, தீவிர விசா​ரணை நடை​பெற்று வருகிறது.

கதவை திறக்​க​முயன்ற பயணி​யின் பெயர் மற்​றும் அடை​யாள விவரங்​கள் இன்​னும் வெளி​யிடப்​பட​வில்​லை. இந்​தச் சம்​பவத்தை நேரில் பார்த்து வீடியோ எடுத்த சக பயணி​யான சீன் பென்​னட், அதைச் சமூக வலை​தளத்​தில் பகிர்ந்​துள்​ளார். அதில், “யாரோ விமானத்​தைக் கடத்த முயன்​றார்​கள். நாங்​கள் பீனிக்​ஸில் அவசரமாகத் தரை​யிறங்​கி​யுள்​ளோம். வலிமை​யான பல ‘ஹீரோக்​கள்’ (சக பயணி​கள்) அவரை மடக்​கிப் பிடித்​தனர். நாங்கள் பாது​காப்​பாக இருக்​கிறோம்” என்று பதி​விட்​டுள்​ளார்.

அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி - சக பயணிகள், ஊழியர்கள் மடக்கிப் பிடித்தனர்
உ.பி.யில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை - சமாஜ்வாதி தேர்தல் அறிக்கை அம்சங்கள்

X