பாகிஸ்தான் முப்படை தலைமை தளபதியானார் அசிம் முனீர்

பாகிஸ்தான் முப்படை தலைமை தளபதியானார் அசிம் முனீர்
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்​தான் ராணுவத் தளப​தி​யாக அசிம் முனீர் தற்​போது பதவி வகித்து வரு​கிறார். அவரை பாகிஸ்​தானின் முப்​படைத் தலைமை தளப​தி​யாக (சிடிஎஃப்) நியமித்து அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதற்​கான ஒப்​புதலை பாகிஸ்​தான் அதிபர் ஆசிப் அலி ஜர்​தாரி வழங்​கி​யுள்​ளார். இந்​தி​யா​வில் முப்​படைத் தலை​மைத் தளபதி என்ற பொறுப்பு சில ஆண்​டு​களுக்கு முன்​னர் புதி​தாக உரு​வாக்​கப்​பட்​டது. இந்​தி​யா​வுக்கு சவால் அளிக்க இது​போன்ற பதவி​யை பாகிஸ்​தான் ஏற்​படுத்​தி​யுள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது.

இதன்​மூலம் பாகிஸ்​தான் நாட்டு பாது​காப்​புத்​துறை அமைச்​சகத்​தின் உயர் பொறுப்​புக்கு அசிம் முனீர் வந்​துள்​ளார். மேலும் நாட்​டின் ஏவு​கணை​கள், அணு ஆயுதங்​களைக் கையாளும் பொறுப்​பும் அசிம் முனீரிடம்​ வந்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

பாகிஸ்தான் முப்படை தலைமை தளபதியானார் அசிம் முனீர்
நூறாவது சதத்தை எட்டுவாரா விராட் கோலி? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in