பாக். - அமெரிக்கா இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சி

பாக். - அமெரிக்கா இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சி
Updated on
1 min read

கராச்சி: பாகிஸ்​தான் ராணுவமும் அமெரிக்க ராணுவ​மும் இணைந்து தீவிர​வாத தடுப்பு பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளன.

பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலம் கரியன் மாவட்​டத்​தில் பாபி என்ற இடத்​தில் தேசிய தீவிர​வாத தடுப்பு மையம்​(என்​சிடிசி) செயல்பட்டு வருகிறது. இங்கு அமெரிக்க ராணுவ​மும், பாகிஸ்​தான் ராணுவ​மும் இணைந்து தீவிர​வாத தடுப்பு பயிற்​சியை மேற்​கொள்​கின்​றன.

இது குறித்து பாகிஸ்​தான் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பாகிஸ்​தான் ராணுவமும் அமெரிக்க ராணுவ​மும் இணைந்து 13-வது கூட்​டுப் பயிற்​சியை ‘இன்​ஸ்​பைர்ட் கேம்​பிட்​-26’ என்ற பெயரில் மேற்​கொள்​கின்​றன. இரண்டு வார காலம் நடை​பெறும் இந்த பயிற்​சி​யில் தீவிர​வாத தடுப்பு பயிற்​சி​யில் இரு​நாட்டு படைகளும் ஈடு​படும்.

தீவிர​வாத தடுப்பு அனுபவங்​களை பகிர்ந்து கொள்​வதற்​காக​வும், சிக்​கலான தீவிர​வாத தடுப்பு நடவடிக்​கை​களில் இரு​நாட்டு படை​யினரின் திறனை வலுப்​படுத்​து​வதற்​காக​வும் இந்த கூட்​டுப் பயிற்சி மிக முக்​கிய​மானது. இவ்​வாறு அந்​த அறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பாக். - அமெரிக்கா இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சி
ஆக்ராவில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேசத்தை சேர்ந்த 38 பேர் நாடு கடத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in