அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேருக்கு பொருளாதார நோபல் பரிசு

அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேருக்கு பொருளாதார நோபல் பரிசு
Updated on: 
1 min read

ஸ்டாக்​ஹோம்: இந்த ஆண்​டுக்​கான பொருளா​தார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்​ஸ்​பேங்க் பரிசுக்கு (நோபல் நினைவு பொருளா​தா​ரப் பரிசு), அமெரிக்​கப் பொருளா​தார நிபுணர்​களான மைக்கேல் உட்ஃபோர்டு மற்​றும் ராபர்ட் இ. ஹால் ஆகிய இரு​வர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்​ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் கழகம் நேற்று இந்த அறி​விப்பை வெளி​யிட்​டது. இந்த ஆண்டு நோபல் பரிசு அறி​விப்​பு​களின் வரிசை​யில் இதுவே இறுதி விரு​தாகும்.சுமார் 1.2 மில்​லியன் டாலர் மதிப்​புள்ள இந்​தப் பரிசு, அவர்​களின் பொருளா​தா​ரக் கோட்​பாட்​டுப் பங்​களிப்புக்​காக வழங்​கப்​படு​கிறது.

பணவீக்​கம், உற்​பத்​தி, நுகர்வு போன்​றவற்​றுக்கு இடையி​லான புள்​ளி​விவரத் தொடர்​பு​களை மட்​டும் சார்ந்​தி​ராமல், மக்​கள் மற்றும் நிறு​வனங்​களின் முடிவு​களை அடிப்​படை​யாகக் கொண்டு பொருளா​தார மாதிரி​களை உரு​வாக்க முடி​யும் என்று இவர்​கள் காட்​டிய​தாக நோபல் குழு தெரி​வித்​தது.

இதன் மூலம் பொருளாதாரத்தை நிலைப்​படுத்​தும் கொள்​கைகளுக்​குப் புத்துயிர் அளித்​த​தாகக் குழு பாராட்​டியது. அதாவது, மக்​களும் நிறு​வனங்​களும் எவ்​வாறு முடி​வெடுக்​கிறார்​கள் என்ற அடிப்​படையி​லிருந்து முழுப் பொருளா​தா​ரத்​தின் செயல்​பாட்​டை​யும் விளக்​கும் வழி​முறையை அவர்​கள் உரு​வாக்​கினர்.

இந்​தப் பரிசின் அதி​காரப்​பூர்​வப் பெயர் “ஆல்ஃப்​ரெட் நோபல் நினை​வாக வழங்​கப்​படும் பேங்க் ஆஃப் ஸ்வீடன் பொருளா​தார அறி​வியல் பரிசு.” டைனமைட்​டைக் கண்​டு​பிடித்​து, ஐந்து நோபல் பரிசுகளை நிறு​விய 19-ம் நூற்​றாண்டு ஸ்வீடிஷ் தொழில​திபரும் வேதி​யிய​லா​ள​ரு​மான ஆல்ஃப்​ரெட் நோபலின் நினை​வாக, ஸ்வீடன் மத்​திய வங்கி 1968-ம் ஆண்டு இதை உரு​வாக்​கியது.

கடந்த ஆண்டு இந்​தப் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்​டர் ஹோவிட் ஆகிய மூவருக்கு வழங்​கப்​பட்​டது. புதிய தொழில்நுட்​ப​மும் உற்​பத்தி முறை​களும் பொருளா​தார வளர்ச்​சி​யை​யும் மக்​களின் வாழ்க்​கைத் தரத்​தை​யும் உயர்த்​து​வதை​யும், புதிய கண்​டு​பிடிப்​பு​களால் பழைய நிறு​வனங்​கள் பின்​தங்​கிப் போவதை​யும் விளக்​கும் “படைப்​பாக்க அழி​வு” கோட்​பாட்​டுக்​காக இவர்​கள்​ கவுரவிக்கப்பட்டனர்.மைக்கேல் உட்ஃபோர்டு ராபர்ட் இ. ஹால்

அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேருக்கு பொருளாதார நோபல் பரிசு
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 2 தவெக எம்எல்ஏக்கள் பதவியேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in