இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 2 தவெக எம்எல்ஏக்கள் பதவியேற்பு

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்ட சத்யபாமா (தாராபுரம்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்ட சத்யபாமா (தாராபுரம்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Updated on: 
1 min read

சென்னை: தவெக சார்​பில் தாராபுரம், மது​ராந்​தகம் ஆகிய தொகு​தி​களின் இடைத்​தேர்​தலில் வெற்றி பெற்ற சத்​தி​ய​பாமா, மரகதம் குமர​வேல் ஆகியோர் எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்​றனர்.

தமிழகத்​தில் கடந்த ஏப்​ரலில் நடை​பெற்ற சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தலில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட சத்​ய​பாமா (தா​ராபுரம்), மரகதம் குமர​வேல் (மது​ராந்​தகம்) ஆகியோர் வெற்றி பெற்​றனர். அதன்​பின் அவர்​கள் அந்த பதவியை ராஜி​னாமா செய்​து​ விட்டு தவெக கட்​சி​யில் இணைந்​தனர். தொடர்ந்து மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களி​லும் இடைத்​தேர்​தல் கடந்த அக்​டோபர் 6-ம் தேதி நடை​பெற்​றது.

​தா​ராபுரம், மது​ராந்​தகம் தொகு​தி​களில் தவெக வேட்​பாளர்​களாக சத்​ய​பா​மா, மரகதம் குமர​வேல் ஆகியோர் போட்​டி​யிட்​டனர். தேர்​தல் முடிவு​கள் கடந்த 9-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டன. மது​ராந்​தகம் தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் 20,040 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தி​லும், தாராபுரம் தொகு​தி​யில் சத்​ய​பாமா 9,471 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தி​லும் வெற்றி பெற்​றனர்.

இதையடுத்து சட்​டப்​பேரவை தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் தலை​மைச் செயல​கத்​தில் அவர்​களுக்கு நேற்று பதவி பிர​மாணம் செய்து வைத்​தார். இரு எம்​எல்​ஏ.க்​களும் உறு​தி​மொழியை வாசித்து எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்​றுக் கொண்​டனர். இந்த நிகழ்​வின் போது அமைச்​சர்​கள் என்​.ஆனந்த், கே.ஏ.செங்​கோட்​டையன், சிடிஆர்​.நிர்​மல்​கு​மார், ராஜ்மோகன், கோ.க.ஆதவ் அர்​ஜூ​னா, அருண்​ராஜ், நெ.மரிய​வில்​சன், ப.வெங்​கடரமணன், சட்​டப்​பேரவை செயலர் ஆர்​.​சாந்தி உட்பட பலர் கலந்​து​கொண்​டனர். பதவி​யேற்ற பின்​னர் 2 எம்​எல்​ஏக்​களும் முதல்​வர் விஜய்யை நேரில் சந்​தித்து வாழ்த்​துப் பெற்​றனர்.

இதையடுத்து எம்​எல்​ஏ.க்​கள் மரகதம் குமர​வேல், சத்​தி​ய​பாமா ஆகியோர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இடைத்​தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்​பளித்த முதல்​வர் விஜய்க்​கும். எங்​களை வாக்​களித்து வெற்றி பெறச் செய்த தொகுதி மக்​களுக்​கும் நன்றி தெரி​வித்​துக்​கொள்​கிறோம்.

தபால் வாக்​கு​கள் முழு​வதும் பணம் கொடுத்து வாங்​கப்​பட்​டன. அவற்றை எல்​லாம் கடந்து நாங்​கள் வெற்றி பெற்​றுள்​ளோம். முதல்​வரின் முகத்தை பார்த்து மக்​கள் எங்​களுக்கு மீண்​டும் வாய்ப்பு அளித்​துள்​ளனர். மக்​கள் இந்த வெற்​றியை கொண்​டாடு​கிறார்​கள். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

தற்​போது சட்​டப்​பேர​வை​யில் தவெக எம்​எல்​ஏ.க்​களின் பலம் 109 ஆக உயர்ந்​துள்​ளது. காங்​கிரஸ், விசிக உட்பட கூட்​டணி கட்​சிகள் ஆதர​வுடன் ஆட்​சியை தொடர்ந்​தா​லும் தனிப்​பெரும்​பான்​மையை பெறு​வதற்​கான தொடர் முயற்​சிகளை தவெக மேற்​கொள்​ளும். இன்​னும் 5 தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் நடத்​தப்பட வேண்​டி​யுள்​ளது. நீதி​மன்ற வழக்​கு​கள் காரண​மாக அவற்​றில் தாமதம் ஏற்​பட்​டு வரு​கிறது. எனவே, அடுத்​து நடை​பெறவுள்​ள 5 தொகு​தி​களின்​ இடைத்​ தேர்​தல்​ தவெக​வுக்​கு பலப்​பரீட்​சை​யாக அமை​யும்​.

<div class="paragraphs"><p>இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்ட சத்யபாமா (தாராபுரம்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.</p></div>
இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி: ராகுல், மம்தா, அகிலேஷ் பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in