“அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது” - ஈரான் அதிபர் உறுதி

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் |கோப்புப் படம்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் |கோப்புப் படம்

Updated on
1 min read

தெஹ்ரான்: அழுத்தம், அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியில் ஈரான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது என்று அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.

மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடனான தனது தொலைபேசி உரையாடலின் போது, பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்தக் காலம் ஆகிய இரண்டின் போதும் அமெரிக்காவின் தொடர்ச்சியான மீறல்களையும், அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் ஈரான் அதிபர் பெசஷ்கியான் விமர்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள கடல்சார் கட்டுப்பாடுகள் போர் நிறுத்தப் புரிந்துணர்வுகளின் தெளிவான விதிமீறல் என்றும், அவை ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு முரணானவை என்றும் ஈரான் அதிபர் கூறினார். இத்தகைய அச்சுறுத்தும் நடவடிக்கைகள் என்பது அமெரிக்காவின் ராஜதந்திர செயல்முறைகள் குறித்த சந்தேகங்களை அதிகரித்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை பேணுவதில் ஈரானின் உறுதியை வலியுறுத்திய பெசஷ்கியான், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மீண்டும் ஒரு போர் ஏற்பட்டால், அது பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மை மீது பெரும் விளைவுகளை உருவாக்கும் என எச்சரித்தார்.

நல்லுறவு மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில், பாரசீக வளைகுடாவின் தெற்குக் கரையோர நாடுகள் உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் உறவுகளைக் கட்டியெழுப்பவும், வலுப்படுத்தவும் ஈரான் உறுதியுடன் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். வெளி தலையீடுகள் இன்றி, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்த நாடுகள் கூட்டாகச் செயல்படும் என்றும் மசூத் பெசஷ்கியான் நம்பிக்கை தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் |கோப்புப் படம்</p></div>
​பாகிஸ்​தான் பிரதமருடன் ஈரான் அமைச்​சர் சந்திப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in