பள்ளிகளில் புர்காவுக்கு தடை: இத்தாலியில் புதிய சட்டம் நிறைவேற்றம்

பள்ளிகளில் புர்காவுக்கு தடை: இத்தாலியில் புதிய சட்டம் நிறைவேற்றம்
Updated on: 
1 min read

ரோம்: இத்தாலி​யில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலை​மை​யில் அமைச்​சரவை கூட்​டம் நேற்​று​முன்​தினம் நடை​பெற்​றது. இக்கூட்டத்​தில், இத்​தாலி​யில் பள்​ளி​களில் புர்கா மற்​றும் நிகாப் அணிவதற்கு தடை விதிக்​கும் சட்டம் நிறைவேற்​றப்​பட்​டது.

இதுகுறித்​து, பிரதமர் மெலோனி கூறுகை​யில், ‘‘பள்​ளி​களில் புர்கா மற்​றும் நிகாப் அணிவதற்​கான தடை என்​பது பாது​காப்பு தொடர்பான நடவடிக்​கை. ஒரு பெண் அல்​லது ஒரு சிறுமி, தனது முகத்தை மறைக்க கட்​டாயப்​படுத்​தப்​படும் போது, அவரது அடிப்படை உரிமை​களும், ஒருங்​கிணைப்​பும் மறுக்கப்படுகின்றன’’ என்​றார்.

இதே​போல், இத்​தாலிய மொழி​யில் போதிய திறன் இல்​லாத மாணவர்​களின் எண்​ணிக்​கையை ஒரு வகுப்​பில் 30 சதவீத​மாக கட்​டுப்​படுத்​தும் சட்​ட​மும் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

இதனால் இத்​தாலிய மொழியைக் கற்க கூடு​தல் வசதி​கள் ஏற்​படுத்​தப்​படும். ஒரு குழந்தை பள்​ளி​யில் ஒருங்​கிணைந்து கல்வி கற்​ப​தில் கடுமை​யான சிரமத்தை எதிர்​கொண்​டால், சமூக நலத்​துறை அதி​காரி​களுக்கு தகவல் தெரிவிக்​கப்​படும். மேலும், அந்​தக் குழந்​தை​யின் பெற்​றோர் இலவச இத்​தாலிய மொழிப் பயிற்சி வகுப்​பு​களில் கட்​டா​யம் பங்​கேற்க வேண்​டும்.

பள்ளிகளில் புர்காவுக்கு தடை: இத்தாலியில் புதிய சட்டம் நிறைவேற்றம்
திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in