லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் நெதன்யாகு, ட்ரம்ப் இடையே கடும் வாக்குவாதம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் நெதன்யாகு, ட்ரம்ப் இடையே கடும் வாக்குவாதம்
Updated on
1 min read

வாஷிங்டன்: அமைதி முயற்​சியை சீர்​குலைக்​கும் வகை​யில் லெபனான் மீது தாக்​குதல் நடத்​திய நெதன்​யாகுவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசி​யில் கடுமை​யாக எச்​சரித்​துள்​ளார்.

ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் கடந்த பிப்​ர​வரி இறு​தி​யில் தாக்​குதல் நடத்​தின. இது மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் போராக வெடித்​தது. இதையடுத்​து, கடந்த ஏப்​ரல் மாதம் போர் நிறுத்​தம் அறி​வித்த அமெரிக்​கா, ஈரானுடன் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில், அமெரிக்காவின் முயற்​சிகளுக்கு முட்​டுக்​கட்டை போடும் வகை​யில், லெப​னான் மீது இஸ்ரேல் தீவிர தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோபம் அடைந்துள்ளார்.

இதன் எதிரொலி​யாக, சமீபத்​தில் இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு​வுடன் ட்ரம்ப் மேற்​கொண்ட தொலைபேசி உரையாடல் கடும் வாக்​கு​வாத​மாக மாறிய​தாக அமெரிக்க ஊடகமான ‘ஆக்​ஸியோஸ்' செய்தி வெளி​யிட்​டுள்​ளது.

நீ பைத்​தி​யக்​காரன்

தொலைபேசி உரை​யாடலின்​போது நெதன்​யாகுவை மிகக் கார​சா​ர​மான வார்த்​தைகளால் திட்​டிய ட்ரம்ப், அவர் நன்றி கெட்​ட​வர் என்​றும் சாடி​னார். நெதன்​யாகு​வின் ஊழல் வழக்​கைக் குறிப்பிட்டு, ‘‘நான் மட்​டும் இல்​லை​யென்​றால் நீ இப்​போது சிறையில் இருந்​திருப்​பாய். நான்​தான் உன்​னைக் காப்பாற்றுகிறேன்.

ஆனால், உன்​னுடைய இந்த நடவடிக்​கை​யால் இப்​போது உலக நாடு​கள் அனைத்​தும் உன்​னை​யும், இஸ்​ரேலை​யும் வெறுக்கின்றன. நீ ஒரு பைத்​தி​யக்​காரன்’’ என்று ட்ரம்ப் ஆவேசமாகப் பேசி​னார். இந்​தத் தொலைபேசி உரை​யாடலுக்​குப் பிறகு, லெப​னான் மீது பெரிய அளவி​லான தாக்​குதலை நடத்த வேண்​டாம் என்ற தனது கோரிக்​கையை நெதன்​யாகு ஏற்றுக்கொண்ட​தாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்​கத்​தில் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார்.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் நெதன்யாகு, ட்ரம்ப் இடையே கடும் வாக்குவாதம்
டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் அண்ணாமலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in